கர்நாடகத்தில் காலை நிலவரப்படி 7.88% வாக்குகள் பதிவு!

கர்நாடகத்தில் காலை நிலவரப்படி 7.88% வாக்குகள் பதிவு!
Published on

கர்நாடகத்தில் காலை 7.00 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கி நடை பெற்று வருகிறது . மக்கள் ஆர்வமுடன் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணி வரையிலான நிலவரப்படி 7.88% வாக்குகள் பதிவாகி உள்ளன.

தமிழ்நாட்டிலிருந்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து கடந்த 8ம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற்றது. தேர்தல் நெருங்கிய நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அல்லி வீசி அதிரடிகளை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடை பெற்று வருகிறது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும்.

Election
Election

இந்த தேர்தலில் 224 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மேலும் மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் 209 வேட்பாளர்களும், ஆம் ஆத்மியில் 209 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக 918 பேர் களத்தில் உள்ளனர். கர்நாடகாவில் தற்போதைய அரசின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது மொத்தம் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com