கொங்கணாபுரத்தில் சனி வாரச்சந்தையில் 8 கோடி வியாபாரம்: பக்ரீத் பண்டிகை எதிரொலி!

கொங்கணாபுரத்தில் சனி வாரச்சந்தையில் 8 கோடி வியாபாரம்: பக்ரீத் பண்டிகை எதிரொலி!
Published on

பக்ரீத் பண்டிகை வரும் 29-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் கொங்கணாபுரத்தில் சனி வாரச்சந்தையில் 8 கோடி வியாபாரம் ஆகியுள்ளது. வருடம் தோறும் பக்ரீத் பண்டிகையொட்டி தமிழகமெங்கும் ஆடு வியாபாரம் மற்றும் இறைச்சி வியாபாரம் களைகட்ட துவங்குவது வாடிக்கை.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் சனி வாரச்சந்தை இன்று கூடியது. பக்ரீத் பண்டிகை வரும் 29-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 11,000 ஆடுகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பணைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த வாரச்சந்தையில் இன்று ரூ.8 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதிகாலை 4 மணி முதல் இருந்தே விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதில் 10 கிலோ எடைகொண்ட வெள்ளாடு ரூ 5,500 முதல் ரூ.7,000 வரையும், கிடாய் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையும், 20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ரூ.14 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரையிலும், வளர்ப்பு குட்டி ஆடு ரூ.2.800 முதல் ரூ.3,200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை விட, ஆடுகள் விலை ரூ.500 முதல் ரூ.1,000 வரை அதிகரித்தது.

இதேபோல், 4 ஆயிரம் பந்தய சேவல், கோழிகள் விற்பனைக்கு வந்தது. இதில் காகம், மயில், கீரி உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த பந்தய சேவல்கள் ரூ/2,500 முதல் ரூ 6,500 வரை விற்கப்பட்டன. பந்தய சேவல்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஆடுகள், கோழிகளை வாங்கி சென்றனர். வாரச்சந்தையில் இன்று ரூ.8 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com