“உ.பி.யில் 80 - தொகுதிகளும் நமதே” அகிலேஷ் யாதவின் புதிய மந்திரம்!

“உ.பி.யில் 80 - தொகுதிகளும் நமதே” அகிலேஷ் யாதவின் புதிய மந்திரம்!

அடுத்த ஆண்டும் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றி பா.ஜ.க.வை தோற்கடிப்பதே இலக்காகும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

“உ.பி.யில் 80 தொகுதிகளும் நமதே” என்ற புதிய கோஷத்தையும் அவர் வெளியிட்டார். 2024 தேர்தலில் பா.ஜ.கவை தோற்டிக்க வேண்டுமானால், அனைத்து தொகுதிகளையும் நாம் வெல்ல வேண்டும் என்றார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஆளுங்கட்சி எம்.பி.க்கு எதிராகவே எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படுகிறது. போலீஸாரே கொள்ளையர்களா மாறிவருகின்றனர். இதுதான் இரட்டை என்ஜின் ஆட்சியா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கன்னோஜ் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சுப்ரத் பதக் மீது போலீஸாரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸாரின் வீட்டிருந்தே திருட்டுபோன வெள்ளி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. சமீபத்தில் நடைபெற்ற

இடைத்தேர்தலில் ராம்பூர் மற்றும் ஆஸம்கர் தொகுதியை பா.ஜ.க.விடம் இழந்துவிட்டது.

பா.ஜ.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் சர்வசாதாரணமாகிவிட்டன. திறன் வளர்ப்பு என்ற பெயரில் குற்றவாளிகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. வர்த்தகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பதிலாக அவர்களிடமிருந்தே பணம் பறிக்கப்படுகிறது. மேலும் மாநில நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றும் அகிலேஷ் குற்றஞ்சாட்டினார்.

இதனிடையே அகிலேஷ் கருத்துக்கு பா.ஜ.க. எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ் பதிலடிகொடுத்துள்ளார். சமாஜவாதி 80 தொகுதிகளில் ஜெயிப்பது இருக்கட்டும். முதலில் அவர்கள் வாராணசி தொகுதியை வெல்லட்டும். அப்படி வெற்றிபெற்றால் நான் அரசியலிலிருந்தே விலகிவிடுகிறேன் மற்றும் எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிடுகிறேன் என்று சவால் விட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com