அயோத்தியில் பக்தர்கள் செல்போன்,காலணிகளை வைக்க 8,000 லாக்கர்கள்!

A locker facility has been set up in Ayodhya Ram temple premises for devotees
A locker facility has been set up in Ayodhya Ram temple premises for devoteesANI

யோத்தி ராமர் ஆலயத்தில் பாலராமரை தரிச்சிக்க வரும் பக்தர்கள் செல்போன்கள் மற்றும் காலணிகளை பாதுகாப்பாக வைக்க 8,000 லாக்கர்கள், ஏழு தானியங்கி லக்கேஜ் எக்ஸ்ரே ஸ்கேனர்கள் நிறுவப்பட்டுள்ளன.

ஆரத்தி நேரங்களை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் விரைவாக உள்ளேவந்து தரிசனம் செய்துவிட்டு வெளியேறவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரிசன நேரமும் 30 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.புதன்கிழமை பால ராமரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது. சுமார் 2.5 லட்சம் பேர் தரிசனம் செய்ததாக ராமர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

முதல் நாளில் சுமார் 5 லட்சம் பேர் கோயிலுக்குச் சென்றுள்ளனர். தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஸ்ரீராமரை பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ராமர் சிலைக்கு முன் உள்ள திரைச்சீலைகள் தலா 15 நிமிடங்கள் என  ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே கீழே இறக்கப்படும்” என்று அறக்கட்டளையின் உறுப்பினர் அனில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கோயிலுக்கு நன்கொடையாக ரூ.3.17 கோடி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். புதன்கிழமை காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதும், அதிகாலை 2:30 மணி முதல் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். காலை 11 மணியளவில், ராம ஜென்ம பூமி பாதைக்கு வெளியே நீண்டிருந்த வரிசைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கோவில் வளாகத்திற்குள் மட்டுமே வரிசை இருந்த்து.

ராம ஜென்மபூமி கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள் 400 மீட்டர் சென்ற பிறகு நிறுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த பைகள் மற்றும் பிற பொருட்கள் லக்கேஜ் யந்திரங்களில் வைக்கப்பட்டு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. பின்னர் பக்தர்கள் வேறு ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களின் செல்போன், காலணிகள் போன்றவை லாக்கரில் வைக்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக 8,000 லாக்கர்கள் நிறுவப்பட்டுள்ளன. எனினும் பெரிய பைகளை வைக்க அங்கு இடமில்லை.

பின்னர் மீண்டும் பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு பக்தர்கள் கோயிலை நோக்கி அனுப்பிவைக்கப்படுகின்றனர். கோவிலுக்குள் பிரசாதம் வழங்க யாருக்கும் அனுமதியில்லை. தரிசனம் சீராகவும், விரைவாகவும் இருக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பின்னர் வெளியேறும் வழியில் நன்கொடை அளிக்கும் கவுன்டர்கள் உள்ளன. அங்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய 10 விஷயம்!
A locker facility has been set up in Ayodhya Ram temple premises for devotees

பக்தர்கள் வளாகத்தின் பின்புற வழியாக வெளியேறுகின்றனர். அங்கு லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருள்கள் பக்தர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.ராமர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 20ஆம் தேதி நிறுத்தப்பட்ட கோயில் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்படவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com