ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபக்காவில் உள்ள வெங்கடேஸ்வரர் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீட்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பலர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது, காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.