இஸ்ரேல் தாக்குதலால் வடக்கு காசாவில் 93 பேர் பலி!

Isreal attack on Gaza
Isreal attack on Gaza
Published on

இஸ்ரேல் காசா போரில் இஸ்ரேல் காசாவின் வடக்கு பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 93 பேர் பலியாகியுள்ளனர்.

காசா இஸ்ரேல் போர் தொடங்கி ஒரு வருடக்காலம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் போர் முடிந்தப்பாடில்லை. போர் பதற்றம் அதிகரித்தே வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் இந்தப் போரை தொடங்கியது. இருதரப்பினருக்கும் இடையே நடக்கும் இந்தப் போரில் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர்.

பஞ்சம், நோயினால் மறுபக்கம் உயிர் சேதம் நிகழ்கிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பையும் எதிர்த்து இஸ்ரேல் லெபனான் மற்றும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் பெரிய நாடு என்பதால் வலுவான ஆயுதங்களைக் கொண்டு பதில் தாக்குதல் நடத்துகிறது. ஆனால், லெபனான் அதிகமான விளைவுகளை சந்தித்து வருகிறது.

ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் பிணைக்கைதிகளை வைத்திருக்கிறது. இந்தநிலையில் பிணைக்கைதிகளை விடுவிக்கக்கோரி பல நாடுகள் தெரிவித்தன. ஆனால், போரை முடிவுக்கு கொண்டு வரும் வரை பிணைக்கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்று ஹமாஸ் கூறிவிட்டது. இதற்கு முன்னர் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும்வரை போரை நிறுத்தமாட்டோம் என்று கூறியது.

இப்படியான சூழ்நிலையில்தான் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் காசாவின் அகதிகள் முகாமிலும் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து தற்போது இஸ்ரேல் காசாவின் வடக்கு பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள ஐந்து மாடி குடியிருப்பு கட்டடத்தை குறிவைத்துதான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் 93 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலியானவர்களில் குழந்தைகளும் உள்ளதாக வெளிநாட்டு பத்திரிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளன.

இதையும் படியுங்கள்:
News 5 - (29.10.2024) த.வெ.க. கட்சி தலைவர் விஜய் எமோஷனல் டாக்!
Isreal attack on Gaza

இன்னும் கட்டட இடிபாடுகளில் சிலர் சிக்கியுள்ளதாக உதவிக் குழுக்கள் தெரிவிக்கின்றன. சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இப்படி இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கப்போவதாக சொல்லி, அப்பாவி பொதுமக்களையே கொன்று குவித்து வருவது உலக நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com