97 வயதில் முதுகலை பட்டம்பெற்ற மூதாட்டி!

97 Old Woman
97 age Old Woman
Published on

இலங்கையில் 97 வயதான லீலாவதி என்ற மூதாட்டி பாலி மற்றும் பௌதத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சாதிப்பதற்கு வயது இல்லை என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதற்கு உதாரணமாக இருந்து சாதித்திருக்கிறார் லீலாவதி பாட்டி. களனிப் பல்கலைகழகத்தின் 143 ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் (21) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பல்கலைகழகத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் விருதுகளை வழங்கினர். இந்த விழாவில்தான் லீலாவதி பாட்டி தனது பட்டத்தைப் பெற்றுள்ளார்.

லீலாவதி அசிலின் தர்மரத்ன என்பவர் 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வஹரணவிலுள்ள மில்லவ கிராமத்தில் பிறந்தார். அவர் தனது ஆரம்பக் கல்வியை மில்லவ பெண்கள் கல்லூரியில் கற்றுள்ளார்.

இதன்பின்னர் அவர் ஒரு ஆசிரியராக தனது பணியை ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்றார். சில காலங்களில் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்றார். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற நொத்தாரிசுகளுக்கான பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற லீலாவதி நொத்தாரிசு பரீட்சையில் சித்தியடைந்த ஒரே பெண் என்ற விருதையும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து லீலாவதி கூறியதாவது, “இந்த முதுகலைப் பட்டம் தன் வாழ்வில் கிடைத்த மாபெரும் சாதனை. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று கூறினார்.

இதையும் படியுங்கள்:
News 5 – (23-08-2024) 'வாழை': கண்ணீரையும், கதறலையும் திரையாகியுள்ளேன் - மாரி செல்வராஜ்!
97 Old Woman

மேலும் பல்கலைகழக நிர்வாகம் கூறியதாவது, “களனிப் பல்கலைகழகத்தின் உயர்கல்வி வரலாற்றில் விசேட மைல்கல்லாக விளங்கும் லீலாவதி பெற்ற இந்த முதுகலைப் பட்டம் உயர்கல்வியில் ஆர்வமுள்ள அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும்.”

ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டால், இளமை முதுமை என்ற வயதெல்லாம் இல்லை. எப்போது நினைத்தாலும், எதை வேண்டுமென்றாலும் சாதிக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுத்தான் லீலாவது பாட்டி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com