அஜ்மீரில் பாஜக அரசின் 9 ஆண்டு நிறைவு விழா! பிரம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர்!

அஜ்மீரில் பாஜக அரசின் 9 ஆண்டு நிறைவு விழா!  பிரம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர்!
Published on

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பாஜக அரசின் 9 ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகிறது. பாஜக அரசின் 9-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடு முழுவதிலும் ‘மகா ஜன் சம்பக்’ எனும் பெயரில் கொண்டாடப்படும் விழாவையும் தொடங்கி வைத்தார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 9 ஆண்டுகளை நிறைவு செய்து 10ஆம் ஆண்டில் காலடி வைத்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 9 ஆண்டில் நிகழ்த்திய மாற்றங்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க பாஜக தலைவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

BJP
BJP

தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், கூட நாட்டிற்கான சேவையில் 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பணி மற்றும் நன்றியுணர்வால் நிறைந்திருப்பதாகவும், எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளும், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற விருப்பதை அடிப்படையாக கொண்டது என்றும் கூறியுள்ளார்.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பாஜக அரசின் நிறைவு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் சென்றுள்ளார் நிறைவு விழாவில் பங்கேற்பதற்கு முன்னதாக, பிரதமர் மோடி அம்மாநிலத்தில் உள்ள பிரம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் கருவறையில் உள்ள பிரம்மா சிலை முன்பு பிரதமர் மோடி ஆரத்தி காண்பித்து வழிபட்டார். பின்னர் பிரதமர் மோடிக்கு அச்சகர் பிரசாதம் வழங்கினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com