பிரதமர் மோடிக்கு 6.6 ஏக்கர் நிலத்தை வழங்க விரும்பும் 100 வயது மூதாட்டி!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர் பிரதமர் மோடியை தனது மகனாக கருதி தனக்கு சொந்தமான 6.6 ஏக்கர் நிலத்தை, அவருக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

மங்கிபாய் தன்வார்மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்தவர்.100 வயது மூதாட்டியான இவருக்கு 12 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். ஆனாலும் தனது பிள்ளைகளைவிட பிரதமர் மோடி மீது மிகுந்த அன்பு வைத்து உள்ளார். தனது அறையிலும் பிரதமர் மோடி படத்தை மாட்டி வைத்துள்ளார்.

இது தொடர்பாக மூதாட்டி மங்கிபாய் தன்வார் கூறியதாவது:-

தினமும் காலையில் எழுந்ததும் எனது அறையில் உள்ள மோடியின் படத்தை பார்ப்பேன். என்னை போன்ற கோடிக்கணக்கான விதவைப்பெண்களுக்கு அவர் ஓய்வூதியம் வழங்குகிறார்.

பிரதமர் மோடி கொரோனா காலத்தில் கோடிக்கணக்கான மக்களை காப்பாற்றினார். நாட்டு மக்களை தனது குடும்பமாகவே அவர் கருதுகிறார். எங்களையும் கவனித்துக் கொள்கிறார். எனவே அவரை மகனாக கருதி எனது பங்கான 6.6 ஏக்கர் நிலத்தை அவருக்கு வழங்க விரும்புகிறேன்.

விவசாயிகளுக்கு கோதுமை, அரிசி மற்றும் உணவு கொடுக்கிறார். பயிர்கள் சேதம் அடைந்தால் உரிய நிவாரணமும் கொடுக்கிறார். எங்களுக்கு நல்ல வீடு கொடுத்துள்ளார். முதியவர்கள் புனித யாத்திரை செல்ல வழிவகை செய்துள்ளார். முதியோர் ஓய்வூதியத்தை மத்திய அரசு உயர்த்தி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com