பெண்மருத்துவரிடம் ஹிஜாபை கழற்றச் சொன்ன பாஜக நிர்வாகியின் மீது 4 பிரிவுகளில் வழக்கு!

பெண்மருத்துவரிடம் ஹிஜாபை கழற்றச் சொன்ன பாஜக நிர்வாகியின் மீது 4 பிரிவுகளில் வழக்கு!

அரசு மருத்துவமனை ஒன்றில் இஸ்லாம் பெண் மருத்துவர் அணிந்திருந்த ஹிஜாபை கழற்ற சொன்ன பாஜக நிர்வாகி புவனேஸ்வர் ராம் மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக பணியாற்றி வருகிறார் டாக்டர். ஜென்னட் பிர்தௌஸ். இவர், கடந்த 24 ஆம் தேதி மருத்துவமனையில் இரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம் என்பவர் இரவு 11.30 மணியளவில் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.

வந்தவர், அங்கு மருத்துவர் பிர்தெளஸ் ஹிஜாப் அணிந்திருந்ததைக் கண்டு,'அரசுப் பணியின்போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும், மருத்துவருக்கு என்று சீருடை கிடையாதா? உண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானா என்று கேள்வி எழுப்பி அங்கு தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார். அதற்கு எதிர் விளைவாக, அனுமதி இன்றி வீடியோ பதிவு செய்வது நாகரீகம் அல்ல எனக்கூறி பாஜக நிர்வாகி வீடியோ பதிவு செய்வதை மருத்துவரும் தனது செல்போனில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த இரு காணொளிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே ஹிஜாப் விவாகரத்தில் பாஜக நிர்வாகியை கைது செய்யகோரி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் திருப்பூண்டி மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலில் போலீசார் வழக்கை ஏற்க மறுத்துள்ளனர். பின்னர் விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், கீழையூர் போலீசார் பாஜக நிர்வாகி, புவனேஸ்வர் ராம் மீது பெண் மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அவரது அனுமதியின்றி வீடியோ பதிவு செய்த குற்றத்திற்காகவும் 294 பி, 353, 298, 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைத்து தற்போது அவரைத் தேடி வருகின்றனர். என்று அப்பகுதி காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com