இளம் பயணியே.. வருக; பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வரவேற்பு!

இளம் பயணியே.. வருக; பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வரவேற்பு!
Published on

டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று வந்த ஒரு விமானத்தில் பயணித்த பச்சிளம் சிசுவுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப் பட்டது. அந்த விமானம் பறந்து கொண்டிருக்கும்போது, நடுவானில் பிறந்த குழந்தை அது.

டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென்று பிரசவ வலி எடுத்து அப்போதே குழந்தை பிறந்தது. இதையடுத்து விமானம் டெல்லியில் தரையிறங்கியதும், விமான நிலைய வளாகத்தில் உள்ள மேதாந்தா மருத்துவ மையத்துக்கு தாயும் சேயும் கொண்டு செல்லப்பட்டனர். தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ட்விட்டர் பதிவில், இந்த குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு, ‘’இளம் பயணியை வரவேற்கிறோம். மேதாந்தா மருத்துவ மையத்திற்கு முதல் குழந்தை வந்து சேர்ந்த நிகழ்ச்சியை நாங்கள் கொண்டாடுகிறோம் தாயும், சேயும் நலம்’’ என பதிவிட்டுள்ளனர்.

டெல்லி விமான நிலைய முனையங்களில் மேதாந்தா அவசர கால சிகிச்சை மையமும் அமைந்துள்ளது. இதில் முனையம் 3-ல் அமைந்துள்ள அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட முதல் சிசு இந்த குழந்தை என்பது குறிப்பிடத் தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com