Red sea
Red sea

செங்கடலில் படகு விபத்து… 16 பேர் மாயம்… தேடும் பணி தீவிரம்!

Published on

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 28 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 16 பேர் மாயமாகியுள்ளனர்.

விமான விபத்து மற்றும் படகு விபத்து போன்றவை சாலை விபத்துகளைவிட மிகவும் கொடுமானவை. ஏனெனில், சாலை விபத்துக்களின்போது நாம் விரைவாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றிவிடலாம். ஆனால், விமான விபத்தும் படகு விபத்தும் அப்படியல்ல. அவர்களை மீட்பதென்பதே மிகவும் சிரமமாகிவிடும். இதன்பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றுவது மிகவும் சவாலான விஷயமாகிவிடும். இதனால் இந்த இரண்டிற்கும் ஏராளமான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படும்.

அப்படியிருந்தும்கூட அவ்வப்போது விபத்துக்கள் நடக்கத்தான் செய்கின்றன.

அந்தவகையில் செங்கடலில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த படகு எகிப்தின் கடலோர நகரமான மார்சா ஆலமின் தெற்கில் மூழ்கியது.

ஒரு “பெரிய அலை” படகு மீது மோதியதாகவும், சுமார் ஐந்து முதல் ஏழு நிமிடங்களில் படகு கவிழ்ந்ததாகவும், சில பயணிகள் தங்கள் அறைகளுக்குள் சிக்கிக் கொண்டதாகவும் செங்கடல் பிராந்தியத்தின் ஆளுநர் அம்ர் ஹனா கூறியுள்ளார். ஆனால், இந்த நான்கு அடுக்கு மோட்டார் படகு மூழ்கியதற்கான விரிவான காரணம் தெரியவரவில்லை. இதுகுறித்தான விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
காசாவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ845… ஒருவேளைதான் உணவு… கதறும் மக்கள்!
Red sea

மேலும் இந்தப் படகின் பாதுகாப்பு நிலையை சமீபத்தில்தான் சோதனை செய்ததாகவும், அப்போது எந்த ஒரு கோளாறும் இல்லை என்றும் தெரியவந்தது என்று கூறுகின்றனர். ஆகையால் கடலின் காலநிலையே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கும் என்று சந்தேகிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு  வரை காலநிலை சரியாக இருந்ததாகவும், நேற்று மதியம் போல்தான் படிபடியாக கால  நிலை மாறியதாகவும் படகில் இருந்து தப்பித்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த படகில் 13 நாடுகளைச் சேர்ந்த  சுற்றுலா பயணிகள் இருந்தனர். இதில் 28 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு விமானம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் 16 பேர் மாயமாகியுள்ளனர். இவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com