ஹைதியில் நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த படகு… 40 பேர் பலி!

Boat Fire off
Boat Fire off
Published on

கரீபியன் தீவுப்பகுதியில் அமைந்துள்ள ஹைதி அருகே நடுக்கடலில் சென்றுக் கொண்டிருந்த படகு ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால், சம்பவ இடத்திலேயே 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹைதி நாட்டில் கடந்த சில மாதங்களாக வன்முறை சம்பவங்கள் நீடித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்கள்கூட விலை உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து வெளியேற தொடங்கியுள்ளனர். அதாவது அந்த நாட்டிலிருந்து சிலர் அகதிகளாக படகுமூலம் வேறு நாட்டிற்கு தப்புகின்றனர்.

அப்போதுதான், சிலர் துர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நடுக்கடலில் படகு நேற்று தீப்பிடித்ததாக சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹைதியின் வடக்கு கடற்கரையில் அகதிகள் பயணம் செய்த படகு தீப்பிடித்ததில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர் என்றும், பலர் காயமடைந்தனர் என்றும் இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது. 

இந்த படகில் பயணம் செய்த 41 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து சர்வதேச அகதிகளுக்கான அமைப்பின் தலைவர் கிரிகோயர் குட்ஸ்டீன் கூறுகையில், “ஹைதி நாட்டில் காணப்படும் பாதுகாப்பு குறைபாடு மற்றும் புலம்பெயர்வதற்கான சட்டப்பூர்வ வழிகள் இல்லாதது இதுபோன்ற சோகச்சம்பவம் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது.” என்றார்.

இதையும் படியுங்கள்:
10 சிம்கார்டுகள் வைத்திருந்தால், மூன்று ஆண்டுகள் சிறை!
Boat Fire off

அகதிகளாக ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கு தப்பி செல்கையில், இதுவரை இதுபோல சம்பவம் நிறைய நடந்துள்ளது. குறிப்பாக படகில் பயணிப்பது மிகவும் சங்கடமான ஒரு விஷயம். ஏனெனில், படகில் கொஞ்சம் இடமில்லாமல், நெருக்கடியில் போனால்கூட, படகு அப்படியே கவிழ்ந்து விழுந்துவிடும். பல உயிர்சேதங்களும் நடக்கும். இதுபோல சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன.

இப்போது மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது. அகதிகளாக வாழ்பவர்களின் நிலையை என்னவென்று கூறுவது? அதுவும் இப்படியான சூழலில் உயிர்த்தப்பிக்க வேறு நாட்டிற்கு செல்லும்போதும் இதுபோன்ற சம்பவங்களில் உயிரை இழப்பது மிகவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com