1997ல் கடலில் வீசப்பட்ட பாட்டில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

A bottle thrown into the ocean in 1997 has been found in France 26 years later.
A bottle thrown into the ocean in 1997 has been found in France 26 years later.

ல ஆங்கிலத் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள், ஒரு செய்தியை எழுதி பாட்டிலில் போட்டு அதை கடலுக்குள் வீசி விடுவார்கள். அது பல ஆண்டுகளுக்குப் பிறகு போடப்பட்ட இடத்திலிருந்து வேறு இடத்திற்கு பயணித்து யாரிடமாவது சிக்கி அதை படித்துப் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட சுவாரசிய சம்பவம் ஒன்றுதான் சமீபத்தில் நடந்துள்ளது. 

1997 இல் அமெரிக்க கடலில் வீசப்பட்ட பாட்டில் செய்தி ஒன்று, 26 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை 1997 இல் பெஞ்சமின் என்ற ஐந்தாம் வகுப்பு மாணவர் மற்றும் அவரது வகுப்பு தோழர்களுடன் சேர்ந்து சிறிய குறிப்பு ஒன்றை எழுதி அவற்றை பாட்டிலில் வைத்து அட்லாண்டிக் கடல் பகுதியில் வீசியுள்ளனர். 

இவர்கள் அப்போது விளையாட்டாக செய்த இந்த செயல், 26 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த குறிப்பை எழுதிய அனைத்து மாணவர்களும் நன்றாக வளர்ந்து பட்டம் பெற்ற நிலையில், கடந்த வாரம் 71 வயதான மீனவர் ஒருவர் பிரான்ஸ் கடற்கரையில் இந்த பாட்டிலைக் கண்டுபிடித்ததாக அவர்களுக்கு கடிதத்தை எழுதியுள்ளார். 

அந்த பாட்டில் செய்தியில் எழுதப்பட்டிருந்தது என்னவென்றால், "தயவுசெய்து திறக்கவும். இந்த பாட்டிலை கண்டுபிடித்தவர்கள் மீண்டும் எங்களுக்கு ஒரு செய்தி அனுப்பவும். அது எங்கே, எப்போது, யாரிடம் கிடைத்தது என்பதையும் பகிரவும்" என அதில் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 

26 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் வீசிய பாட்டில் குறித்த தகவல் தற்போது கிடைத்ததை எண்ணி, பெஞ்சமின் மற்றும் அவரது தோழர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறியுள்ளார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com