குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை பலி!

borehole
boreholeImg Credit: The hindu
Published on

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சுரக்புரா என்ற கிராமத்தில் விவசாயத்திற்காக போர்வெல் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றுள்ளது. பணி முடிந்தும்  போர்வெல் குழாயின் மூடியை முழுமையாக மூடாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று மாலை அப்பகுதியில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் ஒன்றரை வயது குழந்தை எதிர்பாராத விதமாக அக்குழாய்க்குள் விழுந்துள்ளது.      

பின் அந்த வழியாக சென்றவர்கள் தான் குழந்தையின் அழுகுரல் கேட்டு குழந்தை ஆழ்துளையில் சிக்கிக் கொண்டதை தெரிந்து கொண்டார்கள். உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்திற்கு விரைந்து வந்த அவர்கள் கேமரா ஒன்றை ஆழ்துளையில்  செலுத்தி குழந்தை இருப்பதை உறுதி செய்து, குழந்தைக்கு ஆக்ஸிஜன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் குழந்தையை காப்பாற்றுவதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.  அவர்கள் வந்து, ஆழ்துளை கிணறு அமைந்துள்ள பகுதியின் அருகிலேயே மற்றொரு குழியை தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.சுமார் 50 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், குழந்தை 45 அடி ஆழத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்தது.

இதையும் படியுங்கள்:
மகளிர் காவலர்களுக்கான அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி - அரசு வெளியிட்ட செய்தி அறிக்கை!
borehole

கிட்டத்தட்ட  15 மணி நேரத்திற்கு மேலாக குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அதிகாரிகளின் விடிய விடிய போராட்டத்திற்கு பின்னர் அதிகாலை 5 மணியளவில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. உடனே குழந்தை மயக்க நிலையில் இருந்ததாக எண்ணி மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து, குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆழ்த்துளை கிணற்றில் இருந்து குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com