குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட குழந்தை? பத்திரமாக மீட்ட இளைஞர்!

வீடியோ காட்சிகள் வைரலாகி காண்போரை பதை பதைக்க செய்கிறது!
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட குழந்தை?  பத்திரமாக மீட்ட இளைஞர்!
Published on

பழைய குற்றால அருவியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை சக சுற்றுலாப் பயணிகள் துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.

மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்கழி மாதத்தில் பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் அருவிகளில் நீராட வந்தவர்கள் நீராட முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Kutralam
Kutralam

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றால அருவியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.

அந்த வகையில், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் குடும்பத்தினர் குளிப்பதற்காக பழைய குற்றாலம் வந்துள்ளனர். அப்போது அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர்களின் 4 வயது பெண் குழந்தை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பலரும் துடிதுடித்தனர். இந்த நிலையில் அங்கிருந்த இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு உடனடியாக கீழே இறங்கி தண்ணீரில் அடித்துச் சென்ற குழந்தையை காப்பாற்றினார் . பொது மக்கள் அலற தண்ணீரில் அடித்துச் சென்று கொண்டிருந்த குழந்தையை சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தார். தற்போது அந்த குழந்தை தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி காண்போரை பதை பதைக்க செய்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com