ஒரு நண்டின் விலை ரூ.56 ஆயிரமா? அதிர்ந்து போன சுற்றுலா பயணி!

ஒரு நண்டின் விலை ரூ.56 ஆயிரமா? அதிர்ந்து போன சுற்றுலா பயணி!
Published on

சிங்கப்பூரில் தனது நண்பர்களுடன் உணவகத்திற்குச் சென்ற ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், அங்கு அவருக்கு வழங்கப்பட்ட ஒரு நண்டின் விலையைப் பார்த்து வாயடைத்துப் போனார். அதாவது ஒரு நண்டின் விலை சுமார் 680 டாலர்கள் அவரிடம் வசூலிக்கப்பட்டதாகக் கூறி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் சீனாவைச் சேர்ந்த 'ஜூன்கோ ஷிம்பா' என்ற பெண், சிங்கப்பூர் உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்த சில்லி நண்டின் விலை 680 டாலர்கள் என தெரிந்ததும் அதிர்ந்து போனார். அந்த உணவகத்தில் பணியாற்றிய பணியாளர் அந்த நண்டை பரிந்துரை செய்ததன் பேரிலேயே அவர் ஆர்டர் செய்துள்ளார். தொடக்கத்தில் அதன் விலை 20 டாலர்கள் எனக் கூறியதாலயே அதை ஆர்டர் செய்ததாக ஷிம்பா கூறினார். அந்த சமயத்தில் அது 100 கிராம் நண்டின் கட்டணம் என அவருக்கு தெரியப்படுத்தவில்லை. நண்டு சமைக்கப்படுவதற்கு முன்பும் அதன் மொத்த எடை பற்றி தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டினார். 

அந்த நண்டின் அளவு வழக்கமாக நான்கு பேர் சாப்பிடும் அளவைவிட அதிகமாகவும், சுமார் மூன்றரை கிலோ வரை இருந்ததாகவும், இதற்கு 680 டாலர்கள் வசூலித்துவிட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஒரு டின்னருக்கே இவ்வளவு செலவானதை அறிந்த என் நண்பர்கள் அனைவருமே வாயெடுத்து போனார்கள். எங்களுக்காக ஒரு முழு நண்டும் அப்படியே சமைக்கப்படும் என யாருக்கும் தெரியாது என ஷின்பா கூறினார். 

ஆனால் இறுதியில் உணவு பில்லைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனடியாக உணவக நிர்வாகத்திடம் போலீசை அழைக்கும்படி கூறினார். பின்னர் அங்கு வந்த போலீசாருக்கு ஷின்பாவின் குழுவினருக்கு மட்டும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும், இதே உணவை ஆர்டர் செய்து மற்றொரு வாடிக்கையாளரிடமும் இதே பணம் வாங்கிய ரசீதையும் ஹோட்டல் நிர்வாகம் காட்டியுள்ளது. சில விவாதங்களுக்கு பிறகு ஹோட்டல் நிர்வாகம் 78 டாலர்கள் தள்ளுபடி செய்துள்ளது. 

இருப்பினும் இதை ஏற்றுக்கொள்ளாத அந்த சுற்றுலா பயணி, சுற்றுலா வாரியத்தை தொடர்பு கொண்டதால் அவரது வழக்கு சிங்கப்பூர் நுகர்வோர் சங்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com