தஞ்சாவூர் பெரிய கோயில் நந்தியில் ஏற்பட்ட விரிசல்!

Nanthi
Nanthi

தஞ்சாவூர் பெரிய கோயில் உலக அளவில் பேசப்படும் ஒரு அற்புதமான பொக்கிஷமாக விளங்குகிறது. கோயிலின் சிறப்பைக் கொண்டு வியந்து போன யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்திய தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பெரிய கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அறிவித்து கண்காணித்து வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலத்தில் மிகப்பெரிய நந்தியம் பெருமாள் அமைந்துள்ளது. இந்த நந்தி சிலையில் நேற்று திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் இதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.

Thanjai Periya kovil
Thanjai Periya kovil

தஞ்சாவூர் என்றாலே அங்குள்ள விமானமும், நந்தியும் தான் நினைவிற்கு வரும். ஒரே கல்லால் செய்யப்பட்ட நந்திகளில் இதுவும் ஒன்று. திருச்சி அருகிலுள்ள பச்சை மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல்லால் ஆன இது, 19 1/2 அடி நீளம், 8 3/4 அடி அகலம், 12 அடி உயரம் கொண்ட இதன் எடை 25 டன். விஜய நகரக் கலைபாணியில் அழகும், கம்பீரமும் கொண்டு அமைந்துள்ள இந்த நந்தி தஞ்சை நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டது.

நந்தி, நந்தி மண்டபத்தை 17ம் நுாற்றாண்டில் நாயக்க மன்னர்களான அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகியோர் உருவாக்கினர். இவர்களது சிலைகள் இந்த மண்டபத்தில் உள்ளது. நந்தி மண்டபத்தின் மேல் விதானத்தில் மூன்றாம் சிவாஜி மன்னர் காலத்தில் பூக்களும், பறவைகளும் ஓவியங்களாக தீட்டப்பட்டன.

இந்த நந்தி சிலையில் நேற்று திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். நந்தி சிலையை சீரமைக்கவும் மண்டபத்தை சீரமைக்கவும் வேண்டும் என்பது தஞ்சை மக்களின் வேண்டுகோள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com