டிப்ளமோ பட்டம் பெற்ற வீட்டு வளர்ப்பு நாய்!

டிப்ளமோ பட்டம் பெற்ற வீட்டு வளர்ப்பு நாய்!
Published on

மெரிக்காவின் நியூ ஜெர்சி சவுத் ஆரஞ் பகுதியில் உள்ளது செட்டான் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் 1856ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கிறிஸ்துவ மதம் கத்தோலிக்கப் பிரிவை சேர்ந்த பல்கலைக்கழகமான இந்தக் கல்வி நிறுவனத்தில் 90க்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு பிரிவுகளின் கீழ் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவி கிரேஸ் மரியானி இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பு பயின்று வந்தார். பட்டப் படிப்பு முடித்த கிரேஸ் மரியானிக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி மாணவியான கிரேஸ் மரியானி கல்வி பயிலும் காலத்தில் பல்கலைக்கழகத்துக்கு அவருக்குத் துணையாக வந்து சென்ற அவரது வீட்டுச் செல்லப் பிராணியான ஜஸ்டின் என்ற நாய்க்கும் டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. மாணவி கிரேஸ் உடன் அவரது அனைத்து வகுப்புகளிலும் கலந்து கொண்ட அந்த நாயின் அர்ப்பணிப்பு உணர்வைப் பாரட்டுவதற்காக இந்தப் பட்டத்தைக் கொடுத்திருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விழாவில் பல்கலைக்கழகத் தலைவர் ஜோசப் பட்டமளிப்பு விழாவுக்கென தயாரிக்கப்பட்ட உடையை அணிந்து வந்து, கிரேஸ் மரியானிக்கு பட்டயச் சான்றிதழை வழங்கினார். அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் சார்பில் ஜஸ்டின் நாய்க்கும் அதற்கெனவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஆடை அணிவிக்கப்பட்டு அந்த நாய்க்கும் டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது. பட்டயச் சான்றிதழை அந்த நாய் தனது வாயில் கவ்வியபடி பெற்றுக்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அப்போது அந்த அரங்கமே ஆரவாரம் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. வளர்ப்பு நாய் ஒன்று டிப்ளமோ பட்டம் பெற்ற இந்த நிகழ்ச்சி உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்து இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com