
வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்கள் என தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் டேனியல் பாலாஜி.
'வேட்டையாடு விளையாடு', 'பொல்லாதவன்', 'வடசென்னை', 'பிகில்' என பிரபல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் டேனியல் பாலாஜி.
குணச்சித்திர வேடங்களில் இவர் சில படங்களில் நடித்து புகழ்பெற்றாலும், இவரை முரட்டுத்தனமான வில்லன் நடிகராகவே ரசிகர்கள் பலரும் அறிவர். ஆனால் அவர் தனது அம்மாவின் ஆசைக்காக பிரம்மாண்டமாக ஒரு கோயில் கட்டியுள்ளார்.
சென்னைக்கருகே ஆவடி பகுதியில் ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை கட்டிய நிலையில், தற்போது கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார் டேனியல் பாலாஜி. இந்த விழாவில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு அம்மனை வழிப்பட்டனர்.
அதுசம்பந்தமான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதோ...