விவாகரத்து வழக்கில், பாதி சொத்தைக் கேட்ட மனைவிக்கு பெரிய ட்விஸ்ட்டைக் கொடுத்த பிரபல கால்பந்து வீரர்!

விவாகரத்து வழக்கில், பாதி சொத்தைக் கேட்ட மனைவிக்கு பெரிய ட்விஸ்ட்டைக் கொடுத்த பிரபல கால்பந்து வீரர்!

இன்றைய காலகட்டத்தில், மிகப்பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களும், பல பிரபலங்களும் பலவிதமான பிரச்னைகளின் காரணமாக திருமணத்திற்குப் பின் விவாகரத்தை நாடுகின்றனர். அதன் முடிவில் ஜீவனாம்சமாக தஙகளது சொத்தில் பாதியை வழங்கிய சம்பவங்களும் நடந்துள்ளது. அந்த வகையில், பெரும் பணக்காரரான பில்கேட்ஸ், பிரபல நடிகரான டாம் குரூஸ், ஜானி டெப் போன்றோரும் அந்த லிஸ்ட்டில் அடங்குவர்.

அந்தவகையில், பின்வரும் இந்த செய்தியை பார்க்கும்போது, மொராக்கோ கால்பந்து வீரரான அச்ரப் ஹக்கிமி, பிற்காலத்தில் தனது மனைவியுடன் சண்டை வந்து அதனால் பாதி சொத்தை அவருக்கு வழங்க நேரிடுமோ என்று முன்கூட்டியே நினைத்திருப்பாரோ என்றுதான் தோன்றுகிறது.

பிரபல கால்பந்து வீரரான அச்ரப் ஹக்கிமி தனது 19வது வயதில் 31 வயதான ஸ்பானிஷ் நடிகையான ஹிபா அபோக்-கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது 24 வயதாகும் அச்ரப் ஹக்கிமி மீது, சில ஆண்டுகளுக்கு முன் கற்பழிப்பு குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது இதுகுறித்த வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில்தான் உள்ளது. இந்நிலையில்தான் அவரது மனைவி ஹிபா அபோக் விவாகரத்து கோரி மேல்முறையீடு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தனது கணவர் சொத்தில் பாதி தனக்கு ஜீவனாம்சமாக வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

இந்த கோரிக்கையை, அச்ரப் ஹக்கிமியும் ஏற்றுக்கொண்டார். வேண்டுமானால் தன் சொத்து முழுவதையும் அவருக்கே கொடுப்பதாகவும் கூறினார். இதையடுதது, அச்ரப் ஹக்கிமியின் பெயரில் இருக்கும் சொத்துக்களை கணக்கெடுக்கும்போதுதான், நீதிமன்றத்திற்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

அச்ரப் ஹக்கிமி, கால்பந்து போட்டிக்காக, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்காக விளையாடியதில், தனது பிராண்ட் அம்பாசிடர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் பரிசுத் தொகை என அனைத்தையும் தனது தாயாருக்கே வழங்கி உள்ளார். அதுமட்டுமல்லாமல், தான் வாங்கிய வீடுகள், மனைகள் என எல்லாமே தாயார் பெயரில் பதிவு செய்துள்ளார். கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை தனது தாய்ரின் கணக்கிலேயே டெபாசிட் செய்துள்ளார். அவரது தாயார் பாத்திமாவின் பெயரில் வாங்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு மட்டுமே 200 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அச்ரப் ஹக்கிமிடம் ஒரு சென்ட் நிலம், சொந்த கார் என எதுவும் இல்லை என நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com