
சென்னையில் உள்ள விஐடி கல்லூரியில் இசைக்கச்சேரியில் கலந்து கொண்ட பிரபல பாடகர் பென்னி தயாள் பாடிக் கொண்டிருந்த போது திடீரென அவர் சரிந்து விழுந்தார். இந்த காட்சியை பார்த்து ரசிகர்களும், கல்லூரி மாணவர்களும் பதறிப் போனார்கள். பின்னர், பென்னி தயாள் திடீரென சரிந்து விழ காரணம் என்ன என்பது தெரிய வந்த நிலையில் பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.
பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள் கச்சேரி ஒன்றில் பாடிக் கொண்டிருக்கும் போது சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 38 வயதாகும் பென்னி தயாள் கடந்த 2002ம் ஆண்டு ரஜினிகாந்தின் பாபா படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான மாயா மாயா பாடல் பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி என பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி வரும் பென்னி தயாள் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல சீசன்களுக்கு நடுவராக பங்கேற்றுள்ளார்.
பென்னி தயாளின் தலையில், நிகழ்ச்சியை படம் பிடிக்க வைத்திருந்த ட்ரோன்கேமரா மோதியதில் தான் இப்படியொரு எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது பலரையும் திகைப்பில் ஆழ்த்தி உள்ளது. திருமண விழாக்கள், கச்சேரிக்கள் எனபல இடங்களில் தலைக்கு மேல் ட்ரோன் கேமராவை பறக்க விட்டு வேடிக்கை காட்டுவார்கள், ஆனால், விளையாட்டு விபரீதம் ஆகிவிட்டது என்பது போல இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில், பென்னி தயாளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பென்னி தயாள் தலையில் ட்ரோன் மோதிய நிலையில், அவரை உடனடியாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அதன் காரணமாக இசை நிகழ்ச்சிபாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ட்ரோன் கேமராக்களை கையாள தெரியாமல் அதனை இயக்குபவர் செய்த தவறு தான் இதற்கு காரணம் என்றும் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.