எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது!

எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது!
Published on

த்தியப்பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் ஷாபுரா பிடோனி ரயில் நிலையத்தின் அருகில் உள்ளது பாரத் பெட்ரோலியம் கிடங்கு. இதன் அருகே நேற்று இரவு எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் சரக்கு ரயிலின் இரண்டு வேகன்கள் தடம் புரண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் ரயிலின் மீட்பு பணிகளில் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் ரயில்வே அதிகாரிகள், ‘‘ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு தொழிற்சாலையில் ரேக்குகளை காலி செய்ய சென்றபோது சரக்கு ரயில் நேற்று இரவு விபத்துக்குள்ளாகி உள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும், எந்தத் சேதமும் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, மெயின் லைனில் ரயில் சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, வழக்கம்போல் ரயில் சேவைகள் எப்போதும்போல் செயல்பட்டு வருகின்றன. இந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது” என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

முன்னதாக, ஒடிசா மாநிலம், பாலாசோரில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கணக்கானோர் இறந்தது, ஏராளமானோர் படுகாயமுற்றது என அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது எரிவாயு ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று தடம் புரண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com