நீண்ட நாள் தோழியின் ஆசையை நிறைவேற்றிய நண்பன்!

A girl suffering from leukemia.
A girl suffering from leukemia.
Published on

மெரிக்காவைச் சேர்ந்த 10 வயது சிறுமி நோய்வாய்ப்பட்ட நிலையில், இறப்பதற்கு முன் அச்சிறுமியை மகிழ்விக்க நண்பன் செய்த செயல் அனைவருக்கும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எம்மா எட்வர்ட்ஸ் மற்றும் டேனியல் மார்ஷல் இருவருமே சிறுவயது நண்பர்கள். எம்மாவுக்கு டேனியல் என்றால் அவ்வளவு பிடிக்கும். டேனியலுக்கும் எம்மா மீது அதிக பிரியம். இருவரும் சேர்ந்து ஜாலியாக விளையாடுவது பேசுவது என நாட்கள் இனிமையாக் கடந்தது. ஆனால் திடீரென ஒரு நாள் எம்மாவுக்கு எலும்பு வலி, காய்ச்சல் என உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதித்தலில் எம்மாவுக்கு Acute Lymphoblastic Leukemia என்ற ஒருவகை கேன்சர் இருப்பது தெரியவந்தது. 

சிறு வயது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்த வகை கேன்சரானது நாளுக்கு நாள் எலும்புகளை வலுவிழக்கச் செய்து உயிரையே பறிக்கும் அளவிற்கு மோசமானது. இதற்காக கடந்த 2022 இலிருந்து எம்மா சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்களும் இதை குணப்படுத்தி விடலாம் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். 

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை பரிசோதித்த டாக்டர்கள், எம்மா இன்னும் சில வாரங்களோ அல்லது சில நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்று தெரிவித்தனர். இதனால், தன் குழந்தை மீண்டும் முன்பிருந்தபடி ஓடியாடி விளையாடும் என நம்பிக் கொண்டிருந்த அவரது பெற்றோர்கள், மிகுந்த துயரத்திற்கு ஆளானார்கள். 

இருப்பினும் இதைப் புரிந்துகொண்ட அவளின் பெற்றோர், கடைசி காலத்தில் எம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும், அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என அனைத்துமே செய்து கொடுத்தனர். அதில் ஒரு பகுதியாக எம்மா மீது அதிக பிரியம் கொண்ட டேனியலை அவளுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என முடிவெடுத்தனர். இதற்கு டேனியலின் பெற்றோரும் ஏற்றுக்கொண்டதால், இருவரின் திருமண ஏற்பாடுகள் ஓரிரு நாளில் செய்யப்பட்டது. 

இதையொட்டி கடந்த ஜூன் 29ஆம் தேதி எம்மா மற்றும் டேனியலின் திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிகழ்வின்போது எம்மா எட்வர்ட்ஸ் ஆத்மார்த்தமாக சிரித்தபடியே பைபிள் வாசகத்தை வாசிக்கும் தருணம் அனைவரது கண்களையும் நனையச் செய்தது. ஆனால் திருமணம் முடிந்த 12 நாட்களில், எம்மாவின் ஆன்மா இவ்வுலகை விட்டுப் பிரிந்தது. கடவுள் தனக்குப் பிடித்தவர்களை முதலில் எடுத்துக்கொள்வார் என்பதுபோல, சிறுவயதிலேயே எம்மா என்ற பத்து வயது சிறுமி காலமானது, அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை அளித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com