கின்னஸ் சாதனை படைத்த 'கரும்பி'!

 'கரும்பி' ஆடு
'கரும்பி' ஆடு
Published on

கேரளாவைச் சேர்ந்த 1.3 அடி உயரமுள்ள குள்ள ஆடு, உலகின் மிகக் குட்டையான ஆடு என்று கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது!

கேரள மாநிலத்தில் கனேடிய பிக்மி இனமான 'கரும்பி' என்ற ஆடு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இந்த ஆடு உலகிலேயே மிகச்சிறிய ஆடு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆட்டின் உயரம் சுமார் 1.3 அடியாகும். இந்த ஆடு கடந்த 2021ல் பிறந்ததாகும். இந்த கரும்பி ஆட்டிகுட்டிக்கு 4 மாதத்தில் ஒரு குட்டி இருப்பதாகவும், தற்போது கரும்பி மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகவும் அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்டின் உரிமையாளரான பீட்டர் லெனு, தன்னுடைய ஆடு மிகவும் குள்ளமாக இருக்கிறது என்பதை அறிந்திருந்த போதிலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவருடைய பண்ணைக்கு வந்த ஒருவர், இந்த ஆடு இத்தனை குள்ளமாக இருக்கிறதே என்று ஆச்சரியத்தோடு சுட்டிகாட்டினார். மேலும் அந்த நபர் ஆட்டின் உரிமையாளரை உலக சாதனைக்கு சமர்ப்பிக்குமாறும் பரிசீலித்தார்.

'கரும்பி' கின்னஸ் உலக சாதனையைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்விப்பட்ட பிறகு, பீட்டர் அதை கால்நடை மருத்துவரிடம் அளவீடுகளுக்காக அழைத்துச் சென்றார். அப்போது தான் அது மிகவும் குள்ளமானது என்று தெரிய வந்தது.

கரும்பி ஆட்டின் சிறப்பு:

கரும்பி என்ற கருப்பு நிற பெண் குள்ள ஆடு, நான்கு வயதில் வெறும் 1 அடி 3 அங்குலம் (38 cm) உயரத்தை மட்டுமே கொண்டுள்ளது. இது உலகத்திலேயே மிகக் குட்டையான ஆடு என்ற பெருமையைப் பெறுகிறது. தடிமனான உடல் மற்றும் மரபணு குள்ளத்தன்மைக்கு பெயர் பெற்ற குள்ள ஆடுகள், அரிதாகவே 21 அங்குலம் (53 செ.மீ) க்கும் அதிகமாக வளரும், ஆனால் கரும்பி, அவற்றை விட இன்னும் சிறியது. குட்டையான கரும்பி, மற்ற ஆடுகளிடையே தனித்து நிற்கிறது.

2021 ஆம் ஆண்டு பிறந்த கரும்பி, தனது பண்ணை தோழர்களுடன் மிக ஆர்வத்தோடு விளையாடுகிறது. பண்ணையில் கரும்பியுடன் மூன்று ஆண் ஆடுகள், ஒன்பது பெண் ஆடுகள் மற்றும் 10 குட்டிகளுடன் பசுக்கள், முயல்கள், கோழிகள் மற்றும் வாத்துகளும் இருக்கின்றன. இந்த ஆடு சிறிய அளவில் இருந்தாலும், அது மற்றவைகளோடு சேர்ந்து சுறுசுறுப்பாகவும் விளையாட்டுத்தனமாகவும் இருக்கிறது.

உலகின் மிகக் குட்டையான ஆடு கரும்பி என்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதால் தனக்கும், மற்றும் எல்லா விவசாயிகளுக்கும் ஒரு மகத்தான மரியாதை கிடைத்துள்ளது என்று கூறுகிறார் பீட்டர்.

கரும்பியின் புதிய குழந்தையின் வருகைக்கு தயாராகும் வேளையில், கரும்பிக்குத் தேவையான அனைத்து அன்பையும் பராமரிப்பையும் தொடர்ந்து வழங்குவதாக உறுதியளிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
கேன் வாட்டர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு… உணவு பாதுகாப்புத் துறை அளித்த அறிவுரை!!
 'கரும்பி' ஆடு

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com