டைட்டானிக் கப்பலில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் தங்க நெக்லஸ்!

டைட்டானிக் கப்பலில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் தங்க நெக்லஸ்!
Published on

டக்கு அட்லாண்டிக் பெருங்கடல், சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரத்துக்கு 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு அதிகாலை பொழுதில் பெரும் சந்தோஷ ஆரவாரத்தோடு தனது முதல் பயணத்தைத் தொடங்கியது டைட்டானிக் கப்பல். கிளம்பிய அடுத்த நான்கு நாட்களில் அந்தக் கப்பல் பனிப்பாறை ஒன்றில் மோதி மூழ்கியது. வரலாற்றில் மிக மோசமான கடல்சார் பேரழிவுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்தக் கப்பல் பேரழிவு குறித்து ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டு, அது உலகம் முழுவதும் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த பயணி ஒருவரின் மெகாலோடான் பல்லுடன் கூடிய தங்க நெக்லஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அனைவருக்கும் மிகுந்த ஆச்சரித்தை அளித்து இருக்கிறது. 2022ம் ஆண்டு, RMS Titanic Inc என்ற நிறுவனம் நீருக்கடியில் ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்தபோது டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளில் இருந்து இந்த நெக்லஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த ரிமோட் வாகனத்தில் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளில் இருந்து இந்த நெக்லஸ் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆறு அங்குல நீளம் கொண்ட இந்த நெக்லஸ், இப்போதும் நல்ல நிலையில் உள்ளது. இது 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். இந்த நெக்லஸ் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த பயணிகள் அல்லது பணியாளர்களில் ஒருவருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக டைட்டானிக் கப்பலில் இருந்து ஒரு தனிப்பட்ட பொருள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பதால், இந்த நெக்லஸ் தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், டைட்டானிக் கப்பலில் உயிரிழந்தவர்களின் நினைவுப் பொருளாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த ஆச்சரியமிக்க நெக்லஸ் தற்போது டென்னசியில் உள்ள பிக்யன் ஃபோர்ஜில் உள்ள டைட்டானிக் மியூசியத்தில் பார்வையாளர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com