இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி , நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழா மும்பையில் உள்ள அம்பானியின் அண்டிலியா வீட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பல்துறை பிரபலங்கள் என பலரும் இந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவில் பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்த ஆனந்த் அம்பானி தற்போது ரிலையன்ஸ் எரிசக்தி நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.தற்போது என்கோர் ஹெல்த்கேர் வாரியத்தில் இயக்குநராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரேன் மெர்ச்சன்டின் மகளான ராதிகா மெர்ச்சென்ட் என்பவரை தான் ஆனந்த் அம்பானி விரைவில் மணக்கவுள்ளார். ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்ச்ன்ட் ஆகிய இருவரும் நேற்றைய நிகழ்ச்சியில் மோதிரம் மாற்றி தங்கள் திருமணம் நிச்சயத்தை உறுதி செய்தனர். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் நிச்சயதார்த்த விழா தொடங்குவதற்கு முன் அண்டிலியா வீட்டில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில் வணங்கி ஆசீர்வாதத்தைப் பெற்றனர்.
இந்த நிச்சயதாரத்த நிகழ்ச்சி குஜராத்தைச் சேர்ந்த இந்துக்கள் கடைபிடிக்கப்படும் கோல் தானா மற்றும் சுனரி விதி போன்ற சடங்குகளுடன் நடைபெற்றது. திருமணத்துக்கு முந்தைய கோல் தானா சடங்கில் வெல்லம் மற்றும் கொத்தமல்லி விதைகள் பறிமாறி கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து சுனரி விதி சடங்கு நடந்தது. இதைத் தொடர்ந்து கணபதி பூஜை செய்யப்பட்டு முகேஷ் அம்பானி குடும்பத்தின் பாரம்பரிய வழக்கத்தின் படி நிச்சயதார்த்த விழாவின் முக்கிய நிகழ்வான லகான் பத்ரிகா (திருமண நிச்சய பத்திரிக்கை) வாசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோ கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.