செல்போன்களைத் தாக்கும் புதிய வைரஸ். தரவுகளைத் திருட வாய்ப்பு.

செல்போன்களைத் தாக்கும் புதிய வைரஸ். தரவுகளைத் திருட வாய்ப்பு.

வைரஸ் என்றாலே ஆபத்தானது போலும். மனிதர்கள்தான் வைரசினால் பாதிக்கப்பட்டு நலம் குன்றி மருத்துவ மனைகளை நோக்கிப் படையெடுத்தால், நம் வாழ்வில் இரண்டறக்கலந்து அது இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்ற நிலைக்கு நம்மை கொண்டு வந்திருக்கும் செல்போன்களையும் தாக்குகிறது வைரஸ் எனும் செய்தி அதிர்ச்சி தருகிறது. அது என்ன வைரஸ்?

ஆண்ட்ராய்டு இயங்கு தளம் கொண்ட செல்போன்களை புதிய வைரஸ் தாக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தரவுகளை திருடும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை வந்துள்ளது. தற்போது பயன்படுத்தப்படுகிற பெரும்பாலான ஸ்மார்ட் ஃபோன்களில் ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் (இயங்கு தளம்) பயன்படுத்தப் படுகிறது. இந்த ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தைக் கொண்டு இயங்குகிற ஸ்மார்ட் ஃபோன்களில் டாம் என்ற புதியவகை புதிய வைரஸ் தாக்குதல் ஏற்படும்  அபாயம் இருப்பதாக இந்திய கம்ப்யூட்டர் அவசர நிலை பதிலளிப்பு குழு (செர்ட்-இன்) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த டாம் வைரஸ் ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள வைரஸ் தடுப்பு அமைப்புகளை புறம் தள்ளிவிட்டு ரான்சம்வேர் என்ற சொல்லப்படுகிற தீம் பொருளை பயன்படுத்தும் திறன் கொண்டது ஸ்மார்ட்போனில் டாம் வைரஸ் வந்து விட்டால் தீங்கு ஏற்படுத்தும் மென்பொருள் செல்போனில் பாதுகாப்பு அம்சங்களை புறந்தள்ள முயற்சிக்கும். அந்த முயற்சி வெற்றி பெறுகிறபோது செல்போனில் உள்ள முக்கிய தரவுகளை திருடுவதற்கு முயற்சிக்கும்.

செல்போனில் உள்ள வரலாறு, புக் மார்க்குகளை படிப்பது, பின்னணி செயலாக்கத்தை கொள்வது, அழைப்பு பதிவுகளை படிப்பது போன்றவற்றுக்கான அனுமதியை திருடும். அழைப்பு பதிவுகள், தொடர்புகள், கேமரா ஆகியவற்றை முடக்கும். டாம் வைரஸ் டெலிபோன் அழைப்பு பதிவுகள், தொடர்புகள் கேமராவிற்கான அணுக்களை பெறுதல் பாஸ்வேர்டுகளை மாற்றுதல் ஸ்கிரீன்ஷாட்களை படம் பிடித்தல், குறுஞ்செய்திகளை திருடுதல், பைல்களை பதிவிறக்கம் செய்தல், பதிவேற்றம் செய்தல், போன்றவற்றை செய்து சி2 என்னும் கட்டளை மற்றும் கட்டுப்பாடு சர்வருக்கு அனுப்பும் திறன் கொண்டது. இவற்றின் மூலம் பல்வேறு இணையதள குற்றங்களை சைபர் கிளை அரங்கேற்ற வாய்ப்பு உண்டு எனவும் எச்சரித்துள்ளது.

இதை தடுக்க வழி  இருக்கிறதா? நிச்சயம் உள்ளது."நம்பகமற்ற இணையத்தளங்களை பயன்படுத்தக்கூடாது.  நம்பகமற்ற லிங்குகளை கிளிக் செய்யக்கூடாது, தேவையற்ற இமெயில் குறுஞ்செய்திகளில் வருகிற லிங்குகளை கிளிக் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், செல்போனில் வைரஸ் தடுப்பு மற்றும் ஸ்பைவேர் தடுப்பு மென்பொருள்களை நிறுவி பாதுகாக்க வேண்டும்". மேற்கண்ட தகவலை இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை பதிலளிப்பு குழு (செர்ட்-இன்) தெரிவித்துள்ளது 

இந்த வழிகளைப் பின்பற்றி எச்சரிக்கையாக இருந்தால் எந்த வைரசிடம் இருந்தும் தப்பலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com