ஓசூரில் உருவாகிறது புதிய வனவிலங்கு சரணாலயம்!

வனவிலங்கு சரணாலயம்
வனவிலங்கு சரணாலயம்

 தமிழகத்தில் ஓசூரில் புதிய ‘காவேரி தெற்கு வனஉயிரின சரணாலயம்’  அமைக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

 இதுதொடர்பாக தமிழக வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது;

தமிழகத்தில் ஓசூரில் அமைக்கப்படும் இந்த புதிய இச்சரணாலயமானது தமிழ்நாட்டின் காவேரி வடக்கு வனஉயிரின சரணாலயம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவேரி வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமையும்.

இப்பகுதியானது தென்னிந்தியாவில் யானைகளின் முக்கிய வாழ்விடமாகவும் காவேரி ஆற்றுப்படுகையில் வன உயிரினங்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாகம் உள்ளது.

இந்த புதிய சரணாலயத்தின்  தொடர்ச்சியாக சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், காவேரி வனஉயிரின சரணாயலம், மலை மாதேஸ்வரா வன உயிரின சரணாலயம் ஆகியவை உள்ளன. எனவே இப்பகுதிகளில் சிறுத்தைகள் மற்றும் அழியும் நிலையில் உள்ள மாமிச உண்ணிகளின் வாழ்விடத்தை மேம்படுத்த ஏதுவாக அமையும்.

மேலும் இந்த புதிய சரணாலயப் பகுதியானது யானைகள் வழித்தடமான நந்திமங்கலம் - உழிபண்டா மற்றும் கோவைபள்ளம் - ஆனபெத்தள்ளா ஆகிய இடங்களையும் உள்ளடக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com