பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் தட்டுப்பாடா? அமைச்சர் விளக்கம்!

ஆவின் பால்
ஆவின் பால்
Published on

தமிழகத்தில் ஆவின் பால் நிலையங்களில் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் தட்டுப்பாடு என செய்திகள் பரவி இருந்தது. தற்போது ஆவின் நிறுவனத்தில் தினமும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பல்வேறு புகார்களும் பொது மக்களிடமிருந்து வந்த வண்ணம் உள்ளது.

இது குறித்து தற்போது பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் கொடுத்துள்ளார். ஆவின் பால் நிலையங்களில் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் தட்டுப்பாடு என்பது இல்லை எனவும், தேவைக்கேற்ப பால் உற்பத்தி செய்யப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது எனவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர், கடந்த ஆட்சி காலத்தைக் காட்டிலும் தற்போது பால் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் 26 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனை, தற்போது 28 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. ஆரஞ்சு நிற பால் பாக்கெட் பொதுமக்களுக்கு இன்னும் 46 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆகி வருகிறது.

Aavin
Aavin

வணிகம் செய்யும் செய்யும் நபர்களுக்கு மட்டுமே விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அந்த விலையும் மற்ற தனியார் கம்பெனிகளை காட்டிலும் 10 ரூபாய் குறைவாகவே ஆவினில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை ஏற்றத்தால் வாடிக்கையாளர்கள் குறைந்து இருப்பதாக வெளியாகிவரும் கருத்து தவறான தகவல். பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப பால் விநியோகம் செய்யப்படும். ஒரு நாளைக்கு 65 லட்சம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

தவறான முறையில் SNF கார்டுகள் பயன்படுத்திய 40 ஆயிரம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அனைத்து கார்டுகளையும் ரேஷன் அட்டைகளுடன் இணைக்கும் பணிகள் துவங்க உள்ளது.

ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் அரசு மானியம் தருகின்றது. இதில் நடைபெறும் தவறுகளை முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில தனியார் பால் விற்பனை ஆக வேண்டும் என்பதற்காக இது போன்ற பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர் சிலர் என அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com