செல்பி ஆசையில் 159 கி.மீ பயணம் செய்த பயணி!

செல்பி ஆசையில் 159 கி.மீ பயணம் செய்த பயணி!

ஆந்திரா - தெலுங்கானா மாநிலத்தை இணைக்கும் விதமாக விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 15ஆம் தேதி டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

முற்றிலும் இந்தியாவில் தயார் செய்யப்பட்ட இந்த ரயில், விமானத்தில் உள்ளதை போன்று இருக்கைகள் மற்றும் முழு ஏசி வசதி செய்யப்பட்ட தானியங்கி கதவுகளுடன் கூடிய ரயிலாகும்.

இந்த ரயிலில் ஏறி போட்டோ எடுப்பதற்காக கிழக்கு கோதவரி மாவட்டம் ராஜமஹேந்திரபுரத்தில் ஒருவர் ஏறினார். ரயிலில் உள்ள வசதிகளை படம் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ரயில் கதவுகள் முடி கொண்டு புறப்பட தயாரானது. அவர் ரயில் கதவை திறக்க முயன்றார். ஆனால் தானியங்கி கதவுகள் என்பதால் திறக்க முடியவில்லை.

அதே நேரத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகர், அந்த இடத்தில் இருந்த நிலையில், எதற்காக ரயிலில் ஏறினீர்கள் என கேட்டார். அதற்கு புகைப்படம் எடுப்பதற்காக ரயிலில் ஏறினேன், தயவு செய்து கதவை திறக்கச் சொல்லுங்கள் என்றார். டிக்கெட் பரிசோதகர், வந்தே பாரத் ரயிலில் உள்ளவை தானியங்கி கதவுகள். ரயில் புறப்படுவதற்கு முன் அவை மூடிக் கொண்டால் மீண்டும் திறக்க முடியாது. எனவே ரயில் மீண்டும் விஜயவாடாவில் மட்டுமே நிற்கும் என தெரிவித்தார்.

பாவம், வந்தே பாரத் ரயிலில் ஏறி செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்ற அந்த நபர், 159 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஜயவாடா வரை பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

'நாட்டில் 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன'

வாராணசி-புதுதில்லி (22436) வந்தே பாரத் அதிவேக ரயில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 இல் தொடங்கிவைக்கப்பட்டது. திங்கள், வியாழக்கிழமை தவிர வாரத்தில் ஐந்து நாள் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

புதுதில்லி-கத்ரா (ஜம்மு-காஷ்மீர்) (22439) இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 2019, அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை சென்ட்ரல், குஜராத் மாநிலம் காந்திநகர் (20902) இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தில் ஐந்து நாள் இயக்கப்படுகிறது.

புதுதில்லி -ஏஎம்பி அந்துரா இடையிலான வந்தே பாரத் அதிவேக ரயில் (22448) ஹரியானா, சண்டீகர், பஞ்சாப், இமாச்சல் வழியே இயக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது.

சென்னை- மைசூரு (20607) வந்தே பாரத் அதிவேக ரயில் கடந்த 2022, நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கப்பட்டது. காட்பாடி மற்றும் பெங்களூர் ரயில்நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நின்று செல்லும். இந்த ரயில் புதன்கிழமை தவிர வாரத்தில் ஐந்து நாள் ஓடும்.

நாக்பூர்-பிலாஸ்பூர் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (20826) கடந்த 2022 டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து மகாராஷ்டிரம் செல்லும் இந்த ரயில் சனிக்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாள் இயக்கப்படுகிறது.

ஹெளரா-ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் அதிவேக ரயில் (22302) சேவைகடந்த 2022 டிசம்பர் 30 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. புதன் கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள்இந்தரயில் இயக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com