பாகிஸ்தானில் கிரிக்கெட் மைதானம் அருகே சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு!

பாகிஸ்தானில் கிரிக்கெட் மைதானம் அருகே சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு!

பாகிஸ்தானில் பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல்கள் சமீப காலமாக மிகவும் அதிகரித்துள்ளன. இன்று பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற மைதானம் அருகே சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் நடந்த சில மைல் தூரத்தில் தான் அந்நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கண்காட்சி போட்டியில் விளையாடி கொண்டிருந்தனர். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான ப்ரோமோ போட்டியானது இந்த குண்டு சம்பவ இடத்திற்கு அருகே உள்ள நவாப் அக்பர் புக்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க பாபர் அசாம், சாஹித் அஃப்ரிடி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் வருகை தந்தனர்.

இந்த தாக்குதல் நடத்த சில மைல் தூரத்தில் தான் அந்நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கண்காட்சி போட்டியில் விளையாடினர். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான ப்ரோமோ போட்டியானது சம்பவ இடத்திற்கு அருகே உள்ள நவாப் அக்பர் புக்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க பாபர் அசாம், சாஹித் அஃப்ரிடி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் வருகை தந்தனர்.

பாகிஸ்தானில் பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. அந்நாட்டில் தற்போது பயங்கரவாத குழுவின் செயல்பாடுகள் அதிக அளவில் தலைதூக்கியுள்ளன. கடந்த வாரம் பெஷாவரில் உள்ள மசூதியில் தெரிக் -இ-தாலிபான் நடத்திய வெடிகுண்டு பயங்கரவாத தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com