ஏ.ஆர். ரகுமானின் ‘கற்றார்’ ! சர்வதேச டிஜிட்டல் தமிழ்  இசை தளம்!

ஏ.ஆர். ரகுமானின் ‘கற்றார்’ ! சர்வதேச டிஜிட்டல் தமிழ் இசை தளம்!

புதிய முயற்சிகள் மூலம் தன்னுடைய தமிழ்ப்பற்றை நிரூபித்து வருபவர் இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான். தமிழை ஆஸ்கார் மேடைக்கு கொண்டு சென்றவர். இந்நிலையில் தன்னுடைய சர்வதேச டிஜிட்டல் இசை தளத்திற்கு 'கற்றார்' என்று தமிழில் வைத்து தமிழுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார் ஏஆர். ரஹ்மான்.

சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை தன்னுடைய இசை மூலம் கட்டிப்போட்டு வருபவர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தான் எனலாம். ஏ ஆர் ரஹ்மான் தொடர்ந்து தனது இசை சாம்ராஜ்யத்தை 30 ஆண்டு காலங்களை தாண்டி விரிவுப்படுத்தி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளான ஜனவரி 6ஆம் தேதியன்று, புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்  ‘கற்றார்’ (KATRAAR) டிஜிட்டல் இசைத்தளத்தினை அறிமுகபடுத்தியுள்ளார்.

இதனிடையே தன்னுடைய புதிய இசை மற்றும் வெப் தளம் குறித்து இசைப்புயல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். கற்றார் என்ற அந்த டிஜிட்டல் இசைத்தளம் விரைவில் துவங்கவுள்ளதாகவும் அதற்கான அடுத்தக்கட்டத்தை நோக்கி தற்போது நகர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தளம் மூலம் கலைஞர்கள் தங்களது படைப்புகளை பட்டியலிட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் அடுத்தடுத்த பல படங்கள் சர்வதேச அளவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

இந்தியாவில் மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் இவர் சிறப்பான இசையமைப்பை வழங்கி வருகிறார். தமிழிலும் இவரது இசையில் கடந்த ஆண்டு அதிகமான படங்கள் வெளியாகி ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றைக் கற்றார் தளம் மூலம் வெளியிடவுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com