இலவசமாக ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு!

இலவசமாக ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு!
Published on

த்திய அரசின் நல்வாழ்வுத் திட்டங்களில் 319 சேவைகள் உட்பட, 1,100க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் அதன் சேவைகளைப் பெற ஆதார் அடையாளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டையைப் பெற்று இதுவரையில் புதுப்பித்துக்கொள்ளாதவர்கள் தங்களுடைய புதிய ஆவணங்களைக் கொண்டு ஆதார் அட்டையைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India (UIDAI) தெரிவித்துள்ளது.

உங்களது ஆதார் அட்டையை தற்போதைய அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்றுடன் புதுப்பித்து வைத்திருப்பது மிகவும் நல்லது. அதற்காக அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் உங்களது ஆதார் அட்டையை உரிய ஆவணங்களைப் பயன்படுத்தி இணைய தளம் மூலம் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் அந்த அறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாதாரணமாக, ஆதார் மையங்களுக்குச் சென்று ஆதார் அட்டையில் திருத்தம் மற்றும் புதுப்பிக்க வேண்டுமென்றால் ஐம்பது ரூபாயை கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆனால், இம்மாதம் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை இலவசமாக இந்தப் புதுப்பித்தல் பணிகளைச் செய்துகொள்ள இந்த ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்த சேவையை, மை ஆதார் ‘my Aadhaar’ எனும் இணையத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இணைய தளத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையை எளிதாக எப்படிப் புதுப்பித்துக்கொள்வது என்பது குறித்து, ‘பொது மக்கள் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி https://myaadhaar.uidai.gov.in/ ல் உள்நுழைய வேண்டும். அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து வரும், 'Document Update' என்ற வாசகத்தை கிளிக் செய்து ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் விவரங்களைப் பார்த்துக் கொள்ளலாம். அதன் பின்னர், ஏற்றுக்கொள்ளப்பட்ட முகவரி மற்றும் அடையாள ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்து தங்களது ஆதார் ஆதாரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com