தென்கொரியாவில் ரோபோ ஒன்று மேல் மாடியிலிருந்து கீழ் விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட நிகழ்வு உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகிலேயே முதன்முறையாக இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உலகில் தற்போது ரோபோக்களின் உபயோகம் கனிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் இதன் உபயோகம் பெரிதளவில் இருக்கிறது. அதிக மக்கள்தொகை உள்ள நாடுகளில், அதிகமான ரோபோக்களைப் பார்க்கலாம். ஏனெனில், மனிதர்கள் போல இவை ஓய்வெடுக்காது, தொடர்ந்து எத்தனை மணி நேரமானாலும் உழைக்கும். அதேபோல் மனிதர்களால் செய்யமுடியாத பல விஷயங்களையும் செய்யும்.
பொதுவாக ரோபோக்களுக்கு உணர்ச்சிகளே இருக்காது.
அந்தவகையில் தென்கொரியாவில் அரசு சார்பாக மக்களுக்கு சேவை செய்யும் ரோபோதான் தற்போது தற்கொலை செய்துக்கொண்டது. இதற்கான காரணங்கள் என்ன என்பது யாருக்குமே தெரியவில்லையாம். கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அதன் உடல் அதே கட்டிடத்தில் கண்டறியப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது மிகவும் விசித்திர நிகழ்வாக அமைந்துள்ளது. ஏனெனில் ரோபோ தற்கொலை என்பது யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ரோபோ ஒரே குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்ததாகவும் மிகவும் குழப்பத்துடன் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். அதேநேரம் தற்கொலைக்கான துல்லியமான காரணம் கண்டறியப்படவில்லை. இப்போது ரோபோவின் பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவை ஆராய்ச்சிக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் கொரியாவில் வைத்து வந்த அந்த ரோபோவை கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பியர் ரோபாட்டிக்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கி இருந்தது. இந்த ரோபோவுக்கு தென்கொரிய அரசு ஊழியர் என்ற ஐடி கார்டும் இருந்தது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இது வேலை செய்யும் நேரமாகும். இதற்கு முன்பு இருந்த இதுபோன்ற உதவியாளர் ரோபோக்கள் பொதுவாக ஒரு தளத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் இந்த வகை ரோபோக்களால் லிஃப்ட் மூலம் பல தளங்களில் வேலை செய்ய முடியுமாம்.
கடந்த 2023ம் ஆண்டிலிருந்து தினசரி ஆவணங்களை வழங்குவது, உள்ளூர்வாசிகளுக்கு உதவுவது போன்ற வேலைகளை செய்து வந்த ரோபோவின் இழப்பை, அந்த மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர்கள் அஞ்சலி செலுத்தியும், இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.