மருத்துவ மாணவர் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!

சென்னை மருத்துவக் கல்லூரி  வளாகம்
சென்னை மருத்துவக் கல்லூரி வளாகம்

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை எதிரே, பழைய சிறைச்சாலை இருந்த இடத்தில், சென்னை மருத்துவக் கல்லூரி வளாகம் செயல்பட்டு வருகிறது. அந்த வளாகத்தில், மாணவர் விடுதியும் செயல்பட்டு வருகிறது.

மருத்துவ மாணவர் விடுதி வளாகத்தில் உள்ள ஜெனரேட்டர் அறையில் இருந்து, நேற்று மாலை 5:00 மணியளவில், திடீரென கரும் புகை வெளியேறியது. அறை முழுதும் தீப் பற்றி எரிய துவங்கியதை கண்டு அங்கிருந்த மாணவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட் தீயணைப்பு நிலைய அலுவலர் தேவேந்திரகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர்.

மேலும் திருவல்லிக் கேணி மற்றும் வண்ணாரப் பேட்டை தீயணைப்பு வீரர்களும் இணைந்து தீயை அணைத்தனர்.

 தீ விபத்து
தீ விபத்து

விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, அதிலிருந்த ஆயில் வாயிலாக பெரிய அளவில் தீ பற்றியது தெரியவந்துள்ளது.

ஜெனரேட்டர் அறை இருந்த கட்டடம் மருத்துவக் கல்லுாரி கட்டடத்தில் இருந்து சற்று தொலைவில் இருப்பதால், மருத்துவக் கல்லுாரி விடுதியிலும், மற்ற பகுதிகளிலும் பாதிப்பும் ஏற்படவில்லை.

அறையில் இருந்த மற்ற எலக்ட்ரானிக் பொருட்கள் முழுதும் எரிந்து நாசமானது. மருத்துவ மாணவர் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com