ஆஸ்திரேலியாவில் கத்திக் குத்து தாக்குதல் நடத்திய தமிழக வாலிபர் சுட்டு கொல்லப்பட்டார்!

ஆஸ்திரேலியாவில் கத்திக் குத்து தாக்குதல் நடத்திய தமிழக வாலிபர் சுட்டு கொல்லப்பட்டார்!
Published on

ஆஸ்திரேலியாவில் துய்மைப் பணியாளர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்திய தமிழ் நாட்டை சேர்ந்த வாலிபரை அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொன்றனர்.

போலீசாரின் விசாரணையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் இந்தியாவிலிருந்து தற்காலிக விசாவில் வந்தவர் என தெரிய . வந்தது. இந்த நபர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் முகமது ரஹ்மதுல்லா சயது அகமது (வயது 32) என்பதும் தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு நேற்று வந்த முகமது ரஹ்மதுல்லா சயது அகமது என்கிற வாலிபர் ரெயில் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த துய்மைப் பணியாளர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அந்த வாலிபர் போலீசார் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டார். இதையடுத்து, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். ரெயில் நிலையத்தில் கத்திக் குத்து தாக்குதல் நடத்திய முகமது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த முகமது ரஹ்மதுல்லா சயது அகமது கத்திக் குத்து தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com