200 அரசு அதிகாரிகளை உருவாக்கிய பழங்குடியின கிராமம்!

200 அரசு அதிகாரிகளை உருவாக்கிய பழங்குடியின கிராமம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பத்ராத்ரி கொத்தாகுடெம் மாவட்டத்தில் உள்ள புர்கம்பாடு மண்டலைச் சேர்ந்த மொராம்பள்ளி பஞ்சாரா பஞ்சாயத்தில்,1945-ஆம் ஆண்டில் உருவான ஒரு கிராமம் தான் அஞ்சனாபுரம். தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட சமயத்தில் இந்த கிராமத்திற்கு பஞ்சாயத்து அந்தஸ்து கிடைத்தது.

படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர் அஞ்சனாபுரம் கிராமவாசிகள். தாங்கள் படிக்காவிட்டாலும் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தரமான கல்வியை பெற்றுத் தர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தனர். அவர்கள் கொடுத்த இந்த ஊக்கமும், பிள்ளைகள் எடுத்த முயற்சிக்கு கிடைத்த பலனாகவும் தற்போது 200 இளம் கிராமவாசிகள் அரசு அதிகாரிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இந்த அஞ்சனாபுரம் ஒரு காலத்தில் பின் தங்கிய கிராமமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த கிராமம் பிற கிராமங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வளர்ந்துள்ளது. 1900 குடியிருப்பு வாசிகளைக் கொண்ட அந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்டோர் தற்போது அரசு வேலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த 1,900 குடியிருப்பு வாசிகளில் 450 குடும்பங்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலம் குன்றியவர்களுக்கு நிதி உதவி அளிப்பது முதல் அங்குள்ள மாணவர்களுக்கு இலவச மாலை கல்வி வழங்குவது வரை இந்த அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுவானது அஞ்சனாபுரத்தில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்.

தங்களது சமூகத்தை ஒரு நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பதே அந்த இளைஞர்களின் குறிக்கோளாக இருந்தது. அதனை சாதித்தும் காட்டி விட்டனர். தற்போது அந்த இளைஞர்கள் பல்வேறு சமூக சேவைகளை நிகழ்த்தக்கூடிய ஒரு அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர் என்ற பெருமையையும் கொண்டுள்ளனர். இதன் மூலமாக நாம் கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். கல்வி இருந்தால் எதனையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த கிராமம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

logo
Kalki Online
kalkionline.com