A very small washing machine created by an Indian youth.
A very small washing machine created by an Indian youth.

இந்திய இளைஞர் உருவாக்கிய மிகச் சிறிய வாஷிங் மெஷின்.. இதுல எப்படி துணி துவைக்க முடியும்? 

Published on

இந்திய இளைஞர்கள் பலே கில்லாடி என்பதை நிரூபிக்கும் விதமாக பல சாதனைகளை அவப்போவது செய்து வருகின்றனர். அப்படிதான் இந்தியாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் உலகிலேயே மிகச் சிறிய வாஷிங்மெஷினை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். 

இந்தியர்கள் என்றுமே அனைத்தையும் வித்தியாசமாக சிந்திக்கும் திறன் படைத்தவர்கள் என உலக நாடுகள் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். அதனாலயே வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் அதை எளிதாக செய்யும் முறையை இந்தியர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். இப்படி, மாற்றுச் சிந்தனைக்கு மகத்தான பெயர் பெற்றவர்கள் இந்தியர்கள். 

இதுவரை எவ்வளவோ முன்னணி வாஷிங் மெஷின் பிராண்டுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பல நவீன அம்சங்களுடன் வாஷிங்மெஷினை உருவாக்கி சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் அதில் ஒருவருக்குக் கூட உலகின் மிகச் சிறிய வாஷிங் மெஷின் தயாரிக்க வேண்டும் என்ற யோசனை வரவில்லை. ஆனால் ஒரு இந்தியர் இந்த விஷயத்தை செய்து காட்டி, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 

இதையும் படியுங்கள்:
உலக பருப்பு தினம்: இந்தியாவில் பருப்பு வகைகள் மற்றும் அதன் நன்மைகள்! 
A very small washing machine created by an Indian youth.

உலக அளவில் சாதிப்பவர்களுக்கு பெரும் அங்கீகாரத்தை வழங்கும் கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டது. அதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சாய் திருமலா நீதி என்பவரின் மிகச் சிறிய கண்டுபிடிப்பு அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. ஆம் இந்த நபர்தான் உலகிலேயே மிகச் சிறிய வாஷிங் மிஷினை உருவாக்கியவர். குறிப்பாக இந்த வாஷிங் மெஷின் சிறப்பாக வேலை செய்வதை அந்த வீடியோவில் நாம் பார்க்கலாம். 

இந்த அளவுக்கு சிறிய அளவு வாஷிங்மெஷினை இவர் எப்படி உருவாக்கி இருப்பார் என நாம் யோசிக்கக்கூட முடியவில்லை. இருப்பினும் இதை ஒருவர் சாத்தியப்படுத்தி சாதனைப் படைத்துள்ளார் என்பதை நாம் பாராட்டியே ஆக வேண்டும். 

logo
Kalki Online
kalkionline.com