50-ஆ? 500-ஆ? இனி பர்ஸே சொல்லும்: தமிழகத்தில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..!

A wallet with ‘eyes
A wallet with ‘eyessource:hindutamil
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

யெஸ் ! மணிபர்ஸுக்கு கண்ணு உண்டு . ஒன்றல்ல இரண்டு கண்கள் உண்டு. நம்ப முடியவில்லையா? மேலே படியுங்கள்.

பார்வையற்றோருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, பணத் தாள்களை அடையாளம் காணும் தொழில்நுட்ப உதவி சாதனம் (வாலட் வித் விஷன் ) இப்போது கிடைக்கிறது. . இது கரன்சி நோட்டுகளை ஸ்கேன் செய்து, அதன் மதிப்பை குரல் மூலம் தெரிவிக்கும் திறன் கொண்டது . கண்பார்வை அற்றவர்கள் இனிமே தங்களை ஏமாற்றி விடுவார்கள் என்ற கவலை வேண்டாம். பார்க்க முடியாதவர்களையம் ஏமாற்றும் உலகம் அல்லவா இந்த உலகம் பார்க்கும் பர்ஸ் மிகுந்த சோதனைகளுக்கு பின் நம்பத்தகுந்தவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எல்லா நாடுகளும் பிரெய்லி முறையில் அச்சிடப்பட்ட கரன்சி நோட்டுகளை புழக்கத்தில் விட்டிருக்கின்றன. ஆனால் அவைகளை விட பார்வை இழந்தவர்கள் இந்த கழுகு பார்வை கொண்ட பர்ஸுகளை தான் விரும்புகிறார்கள் நம்பவும் செய்கிறார்கள். ஏன் என்றால் கரன்சி நோட்டை இதன் முன் காட்டினால் உடனே அதன் டினாமினேஷன் என்ன என்று பட்டென்று பகர்ந்துவிடும் .

இது ஒருபுறம் இருக்க ஏற்கனவே வெளிநாடுகளில் கண்கள் வரைந்த மணிபர்ஸுகளுக்கு நல்ல டிமாண்டு. பேய் கண்ணு பிசாசு கண்ணு பூதகண்ணு ஏன் நாய் கண்ணு நரிக் கண்ணு வரைந்த பர்சுகள் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. கண்கள் வரையப்பட்ட மணிபர்ஸுகள் திருடு போகாது என்று சீனா காரர்கள் நம்புகிறார்கள். ஏதேதோ கண்டு பிடிக்கிறார்கள். ஜேப்படிக்காரன் கை பட்டவுடன் அலாரம் போல அலறும் பர்ஸ் ஒன்றை கண்டு பிடித்தால் நன்றாக இருக்கும். அதை ஆன் செய்துவிட்டு பஸ்களிலும் ட்ரைன்களிலும் ஹாயாக பயணிக்க முடியும்.

தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தால் சென்னையில் இத்தகைய பர்ஸுகள் விநியோகிக்கப்படுகிறது

logo
Kalki Online
kalkionline.com