இணையத்தில் Ai கோர்ஸ் படித்து பல லட்சம் சம்பளத்தில் வேலை பெற்ற இளைஞர்.

இணையத்தில் Ai கோர்ஸ் படித்து பல லட்சம் சம்பளத்தில் வேலை பெற்ற இளைஞர்.

ணையத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் கோர்ஸ் படித்து, பிரபல நிறுவனம் ஒன்றில், பல லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை பெற்றுள்ளார் ஓர் விவசாயியின் மகன். இவருடைய விடாமுயற்சி இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. 

அண்மை காலமாகவே செயற்கை நுண்ணறிவுத்துறை மற்றும் அதை சார்ந்த பல துறைகளும் அசுர வளர்ச்சியை அடைந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். இது எதிர்காலத்தில் மனித குலத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று சொன்னால் மிகையாகாது. சொல்லப்போனால் சினிமா, கல்வி, விவசாயம் என தொழில்நுட்பம் தாண்டிய அனைத்து துறைகளிலும், இது தன்னுடைய ஆக்கிரமிப்பை செலுத்துத் தொடங்கிவிட்டது. 

ஒருபுறம், இதனால் பலருடைய வேலை பறிபோகும் என சொல்லப்பட்டாலும், மறுபுறம், செயற்கை நுண்ணறிவுத் துறைசார்ந்த புதிய வேலைவாய்ப்புகள் அதிகப்படியாக உருவாகி வருகிறது. இதனால், செயற்கை நுண்ணறிவு மற்றும் மெசின் லேர்னிங் துறை சார்ந்த படிப்புகளுக்கு, எதிர்காலத்தில் அதிக தேவை இருக்கும் என சொல்லப் படுகிறது. தற்போதெல்லாம் இணையத்திலேயே நமக்கு வேண்டிய கோர்ஸை நாம் படித்துக்கொள்ளலாம். இதைப் பயன்படுத்திய ஓர் விவசாயியின் மகன் தன் திறனை வளர்த்துக்கொண்டு பல கோடி இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாக மாறியிருக்கிறார். 

தெலுங்கானா மாநிலத்தில் ஓர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜெருபுல்லா பிரேம்குமார். இவர் பி டெக் படிப்பை முடித்துவிட்டு, முன்னணி நிறுவனம் ஒன்றில் டேட்டா இன்ஜினியராக பணியில் சேர்ந்தார். அவர் பணியில் சேர்ந்து 2 ஆண்டுகள் ஆகியும் எதிர்பார்த்த அளவு சம்பள உயர்வு கிடைக்கவில்லை. போதிய அளவு அனுபவமிண்மையால் வேறு வேலைக்கும் அவரால் செல்ல முடியவில்லை. இருப்பினும் தனக்கு டெக்னாலஜியின் மீதிருந்த ஆர்வம் காரணமாக, இணையத்திலேயே மிஷின் லேர்னிங் மற்றும் AI தொழில்நுட்பம் பற்றி படித்திருக்கிறார். 

ஒருபுறம் வேலை பார்த்துக் கொண்டே, மறுபுறம் வார இறுதி நாட்களில் தன் ஆன்லைன் வகுப்புகளில் கவனம் செலுத்தி, சில மாதங்களிலேயே AI தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவராக மாறியிருக்கிறார். அதன் பின்னர், அது சார்ந்த அனைத்து வேலைகளுக்கும் விண்ணப்பித்து வந்த நிலையில், அவரின் திறமைக்கு பறைசாற்றும் விதமாக தெலங்கானாவில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தில் டேட்டா இன்ஜினியர் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலைக்காக அவருக்கு பல லட்ச ரூபாய் மாத சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. 

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அவர் முன்பு பணியாற்றிய நிறுவனத்தில் வாங்கிய சம்பளத்தை விட புதிய வேலையில் 100 மடங்கு அதிக சம்பள உயர்வு கிடைத்துள்ளது. விடாமுயற்சியுடன் சில முடிவுகளை எடுத்து செயல்படுத்தும்போது, நாம் பெரிய இடத்தை நிச்சயம் அடைவோம் என்பதற்கு பிரேம்குமார் எடுத்துக்காட்டாக மாறியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com