ஆத்தாடி... எம்மாம்பெரிய ஜம்ப்... இதுவரை கண்டிராத ஜல்லிக்கட்டு காளையின் ஹைலைட் வீடியோ!

ஆத்தாடி... எம்மாம்பெரிய ஜம்ப்... இதுவரை கண்டிராத ஜல்லிக்கட்டு காளையின் ஹைலைட் வீடியோ!

பல அடி உயரத்துக்கு பறந்து சென்று தரையைத் தொட்டு அசால்ட்டாக ஓடிய காளை, அங்கு கூடியிருந்தவர்களையும் திகைப்பில் ஆழ்த்தியதோடு, அது சம்பந்தமான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இச்சம்பவம், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலாத்தூர் பகுதியில், நேற்று காலை நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தான் அரங்கேறி உள்ளது. நேற்று நடந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு, 211 மாடுபிடி வீரக்ள் களம் இறங்கினர்.

இதில் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், இப்போட்டிக்கு நடுவே, வாடிவாசலிருந்து சீறிப்பாய்ந்த காளை ஒன்று, மாடுபுடி வீரர்களிடம்‌ பிடிபடாமல் மைதானத்தின் வெளியே வந்த போது, அங்கே பொதுமக்கள் பலரும் ஒரு திட்டின் மீது கூடியிருந்த நிலையில், அவர்களையும் தாண்டி பல அடி உயரத்திற்கு பாய்ந்து, அசால்ட்டாக தரையைத் தொட்டு ஓடியது.

இந்த வீடியோவை பார்வையாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், அந்த மாடு பல அடி உயரத்திற்கு குதிப்பதைப் பார்த்து அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும், இந்த ஒரு நிகழ்வானது, இதுவரைக்கும் யாரும் கண்டிராத நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com