ஆவின் பால் பாக்கெட்கள் 200 லிட்டர் திருட்டு!

ஆவின்
ஆவின்

திருநெல்வேலியில் ஆவின் பால் பண்ணையில் பாக்கெட் பால் திருட்டு தொடர்பாக பணியாளர்கள் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர். தற்போது தினமும் ஆவின் பால் நிறுவனமும் தொடரும் சர்ச்சைகளும் என போய்க் கொண்டிருக்கிறது. கடந்தவாரம் தூத்துக்குடியில் ஆவின் பால் குறித்த சர்ச்சை புகார்கள் வந்து கொண்டிருந்தது.

இதே போன்று திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து 75 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களுக்கு தினந்தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வாகனங்களில் கூடுதல்களாக பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டு கொண்டு செல்வதாக புகார்கள் வந்த நிலையில் ஆவின் கூடுதல் துணை மேலாளர் ஜோஸ்பினா மற்றும் சாந்தி ஆகியோர் தெற்கு பஜார் பகுதிக்கு பால் கொண்டு செல்லும் வாகனத்தை சோதனையிட்ட போது அதில் கணக்கில் வராத 209 லிட்டர் பால் பாக்கெட்டுகள் கூடுதலாக இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. ஆவினில் இருந்து 200 லிட்டர் பால் பாக்கெட்களை திருட முயன்ற ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

உடனடியாக அந்த பால் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆவின் நிரவாகம் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆணையாளர் ராஜேந்திரன் உத்திரவின் பெயரில் துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் ஆவின் நிர்வாகத்திற்கு நேரில் சென்று விசாரனை நடத்தினார். . இது தொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பால் பாக்கெட் திருட்டு தொடர்பாக பால்பண்ணையில் தொழிற்சாலை உதவியாளராக பணிபுரியும் ஆசைத்தம்பி, பணியாளர் ஷேக் மன்சூர், வேன் டிரைவர் அருண், ரமேஷ் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.தினமும் மாலையில் பணிமுடிந்து செல்லும் சில உயரதிகாரிகள் வீட்டுத்தேவைக்கு பால் எடுத்துச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி மூவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பல மாதங்களாக நடந்து வரும் பால் திருட்டு தொடர்பாக விரிவான விசாரணை நடை பெற்று வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com