ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் குறைக்கப்படுகிறதா?

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் குறைக்கப்படுகிறதா?

பால்வளத்துறையின் மோசமான செயல்பாடு, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொண்ட காரணத்தால் அமைச்சராக இருந்த ஆவடி நாசரின் பதவி பறிக்கப்பட்ட புதிய பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஊதா நிற புதிய பசும்பால் பாக்கெட்டை அறிமுகப்படுத்தி, பச்சை நிற பால் பாக்கெட்டுகளை குறைக்கும் முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

பால் உற்பத்தி நாடு முழுவதுமே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 5 சதவீத வளர்ச்சி பெற்று வரும் துறையில் நாளுக்கு நாள் புதுப்புது சவால்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. நாடு முழுவதும தற்போது 628 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அடுத்து வரும் 10 ஆண்டுகளில் இதுவே மூன்று மடங்காக உயர வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

ஆவடி நாசர் தலைமையிலான பால்வளத்துறையில் கொள்முதல் அளவை உயர்த்தவோ, விற்பனையை அதிகரிக்கவோ எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இழப்பை சந்தித்து வரும் ஆவின் நிறுவனம், வேறு வழியில்லாமல் விலை உயர்வை அறிவித்ததது. தி.மு.க ஆட்சிக்கு வந்த முதல்நாளே பால் விலை குறைக்கப்பட்டது. ஆனால், ஆறே மாதத்தில் பால் விலை திடீரென்று உயர்த்தப்பட்டது.

கடந்த ஓராண்டில் பால் கொள்முதல் 10 லிட்டம் லிட்டருக்கும் மேல் குறைந்து போனது. இதனால் ஆவின் நிறுவனமும் கடுமையான நெருக்கடியில் சிக்கியது. ஒரு லிட்டர் பாலுக்கு ஏறக்குறைய 22 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதை சமாளிக்க பால் பொருட்களின் விலைகள் நான்கு முறை உயர்த்தப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.

இரண்டு நாள் முன்பு சென்னையில் ஆவின் செரிவூட்டப்பட்ட பசும்பால் என்கிற பெயரில் சத்து குறைவான புதிய வகை பால் பாக்கெட்டை ஊதா நிறத்தில் விநியோகிக்க ஆரம்பித்துள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை என்கிறார்கள், பால் முகவர்கள். கொழுப்பு சத்து குறைவான ஆவின் செரிவூட்டப்பட்ட பசும்பாலினை பொதுமக்களும், சில்லறை வணிகர்களும் வாங்க மறுப்பதாகவும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் வேண்டுமென்று விரும்புவதாகவும் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் பால் முகவர்களுக்கு 70% பச்சை நிற பால் பாக்கெட்டுகளை குறைத்து வெறும் 30% மட்டுமே வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஊதா நிற பால் பாக்கெட்டில் வரும் பசும்பாலை வாங்கியே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக வெளியான செய்திகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன.

உலகெங்கும் பால் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் தொடர்ந்து பால் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 3 மடங்கு விலை உயர்ந்திருக்கிறது. இது அனைத்து மாநிலங்களிலும் உள்ள பிரச்னை என்றாலும் பால் கொள்முதல் தொடர்ந்து குறைந்து கொண்டே இருப்பது தமிழ்நாட்டில் மட்டுமே நடந்து வருகிறது. புதிய அமைச்சருக்கு ஏகப்பட்ட சவால்கள் காத்திருப்பது உண்மைதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com