நெருங்கும் தீபாவளி; ஆவினில் நெய் பாதுஷா மற்றும் புது இனிப்புகள் அறிமுகம்!

தீபாவளி இனிப்புகள்
தீபாவளி இனிப்புகள்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் 3,200 டன் அளவுக்கு இனிப்புகள்  தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

-இதுகுறித்து அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்ததாவது:

இந்த வருட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் 3,200 டன் அளவுக்கு இனிப்புகள்  தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த இனிப்புகள் விற்பனை  ரூ. 250 கோடி அளவுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியின் போது இந்த இனிப்பு வகைகள் ரூ. 85 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டு ஏற்கனவே ஆவின் தயாரிப்பில் உள்ள வழக்கமான 275 வகையான பால் இனிப்பு வகைகளுடன் இந்த வருடம் மேலும் புதிதாக நெய் பாதுஷா, கருப்பட்டி அல்வா, நட்ஸ் அல்வா, காஜு கட்லி உள்ளிட்ட  9 வைகயான இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்த பட்டுள்ளது. மேலும் கலப்படமற்ற சுத்தமான நெய் கொண்டு ஆவின் இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.

 -இவ்வாறு அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com