இனிப்புகள்
இனிப்புகள்

ஆவின் இனிப்பு தரமில்லை! பொதுமக்கள் கசப்பு!

Published on

ஆவின் நிறுவனத்தில் பால் மட்டுமின்றி, 200 வகையான மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களும் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அவை, தற்போது மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கின்றன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.

ஆவின் இனிப்பு
ஆவின் இனிப்பு

ஆவின் நிறுவனம் சார்பில் காஜூ கத்லி, காஜூ பிஸ்தா ரோல், நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, கருப்பட்டி அல்வா, மோதி பாக் போன்ற இனிப்புகள் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், இவற்றில் நெய்யின் நறுமணம் மற்றும் சுவை குறைவாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இனிப்பு
இனிப்பு

இனிப்புகளில் நெய்யின் நறுமணம் மற்றும் சுவை பெரிதாக இல்லாததால், ஆவின் இனிப்புகள் வாங்கிய பலரும் அதிர்ச்சி அடைந்தனர். தீபாவளி மற்றும் பண்டிகைகாலங்கள் தொடர்ந்து வரும் வேளையில் ஆவின் இனிப்புகள் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும் என கருதப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com