விலை உயர்ந்தது ஆவின் இனிப்பு : பொதுமக்களுக்கு கசப்பு!..

விலை உயர்ந்தது ஆவின் இனிப்பு : பொதுமக்களுக்கு கசப்பு!..

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ஆவின் நிறுவனம் சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

மேலும் வெண்ணெய் , நெய், பால்கோவா, ஐஸ் கிரீம் முதலான பால் பொருட்களையும் உரிய தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. 

நுகர்வோர்களின் தேவைக்கேற்ப புதிய பால் உப பொருட்களையும் அவ்வப்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. 


தற்போது ஆவின் இனிப்புகளின் விலை கணிசமான அளவு உயர்த்ததுப்பட்டுள்ளது. முந்தைய பொருட்களின் விலையை விட ரூ 20/- முதல் 80/- வரை விலையேறி உள்ளது.

பண்டிகை காலங்கள் அதிகம் வரும் நாட்களில் இந்த விலை உயர்வு அதிருப்தி அளிப்பதாக பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com