ஆவின் டிலைட் பசும்பால்; 3 மாதம் வரை பயன்படுத்தலாமாம்!

ஆவின் டிலைட் பசும்பால்
ஆவின் டிலைட் பசும்பால்

வீடுகளில் 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தக்கூடிய பசும் பாலை ‘ஆவின் டிலைட்’ என்ற  பெயரில் ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த பாலை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லாமல், வெளியிலேயே 90 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாக அதிகாரிகள் கூறீயதாவது:

இந்த புதிய ஆவின் டிலைட் பாலில் 3.5 சதவிகித கொழுப்பு உள்ளது, மேலும் இதில் பாக்டீரியா முழுமையாக நீக்கப் பட்டுள்ளது. இந்த பாலை வாங்கிய உடன் பாலை சூடாக்கி பயன்படுத்தலாம். 3 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கும் ஏற்றது. இந்த ஆவின் டிலைட் பசும் பால் 500 மி.லி. அதிகபட்ச சில்லறை விலை ரூ. 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500 மி.லி. பாக்கெட்டுகளில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் நவீன தொழில் நுட்ப முறையில் இந்த ஆவின் டிலைட் என்ற பசும் பால் தயாரிக்கப்படுகிறது.

-இவ்வாறு ஆவின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com