கோவில்களில் விஐபி பிரேக் தரிசன திட்டத்தை கைவிட வேண்டும்! இந்து முன்னணி வலியுறுத்தல்!

கோவில்களில் விஐபி பிரேக் தரிசன திட்டத்தை  கைவிட வேண்டும்! இந்து முன்னணி   வலியுறுத்தல்!
Published on

தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி., பிரேக் தரிசன திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. விசேஷ நாள்களில் தரிசனக் கட்டணமும் பல மடங்கு ஏற்றப்பட்டுள்ளது என்பதும் நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளனர் இந்து முன்னணியினர்.

கோவில்களில் இதற்காக பொதுமக்கள் பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. அதனால் பல்வேறு பிரச்னைகள் எழுகிறது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :- தமிழகத்தில் பிரபலமாக உள்ள கோவில்களில் விஐபி பிரேக் தரிசனத்துக்காக ஒவ்வொரு மணி நேரமும் பக்தா்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கும் செயல் கண்டிக்கத் தக்கதாகும். இறைவன் முன்பாக ஏழை, பணக்காரன் என்று பாகுபடுத்தி கடவுளை காட்சிப் பொருளாக்கும் தரிசன கட்டண முறையை இந்து முன்னணி கடுமையாக எதிா்த்து வருகிறது.

இது பக்தா்களிடம் பொருளாதார தீண்டாமையை ஏற்படுத்தும் செயலாகும். அதிலும் காா்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, சூரசம்ஹாரம் உள்ளிட்ட விசேஷ நாள்களில் தரிசனக் கட்டணமும் பல மடங்கு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகத்தில் ஒரு கால வழிபாடு இல்லாமல் பல ஆயிரம் கோயில்கள் மூடிக்கிடக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் பாமர பக்தா்களின் இறைபக்தியை கேவலப்படுத்தும் விஐபி பிரேக் தரிசன திட்டத்தை அதிகாரிகள் கைவிட வேண்டும்.

அதே வேளையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டால் ஒவ்வொரு கோயில்களின் முன்பாகவும் பக்தா்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com