தமிழ்நாட்டில் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கான அனுமதிக் கட்டணம் ரத்து!

தமிழ்நாட்டில் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கான அனுமதிக் கட்டணம் ரத்து!

தமிழ் நாட்டில் பேட்டரி மூலம் இயக்கப் படும் வாகனங்களுக்கான அனுமதிக் கட்டணம் ரத்து செய்யப் படுவதாக தமிழக அரசு அரசாரணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி அனுமதி கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது

அதில் பெட்ரோல், டீசல் அல்லாத மெத்தனால், எத்தனால் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு இனி தமிழ் நாட்டில் எந்தவொரு அனுமதிக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

two wheeler
two wheeler

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களுக்கு மாற்றாக பேட்டரி வாகனங்களின் வரத்து அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. எரிபொருட்கள் விலை உயர்வால், நடுத்தர மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தற்போது பேட்டரிகள் மூலம் இயங்கும் வாகனங்களை நாடி செல்லத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தமிழ் நாட்டில் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கான அனுமதிக் கட்டணத்தை ரத்து செய்து, அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

மத்திய அரசின் விதி முறைகளைப் பின்பற்றி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், சரக்கு வாகனம் தவிர்த்து 3 ஆயிரம் கிலோ எடைக்கும் குறைவான வாகனங்களுக்கும் இந்த அனுமதிக் கட்டண ரத்து உத்தரவு பொருந்தும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com